அவசர காலை நேரங்களில் மாவு புளிக்க வைக்கும் கவலையின்றி, உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான வெள்ளரிக்காய் இட்லி! வாழை அல்லது பூவரச இலையில் வேகவைக்கும் போது இதன் மருத்துவக் குணமும் நறுமணமும் அதிகரித்து, உடலுக்கு அளப்பரிய நன்மைகளைத் தருகிறது.
காலை நேர அவசரத்திலோ அல்லது மாலை நேர பசியின் போதோ, வழக்கமான இட்லி மாவு புளிப்பதற்குள் என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? அதற்கு ஒரு மிகச்சிறந்த, ஆரோக்கியமான தீர்வுதான் இந்த "வெள்ளரிக்காய் இட்லி". பொதுவாக தெற்கு கர்நாடகாவின் கொங்கணி சமையலில் 'தௌசே இடாளி' (Taushe Idli) என்று அழைக்கப்படும் இந்த உணவு, உடனடி செரிமானத்திற்கும் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கும் ஏற்றது. மாவை ஊறவைத்து, ஆட்டி, புளிக்க வைக்க வேண்டிய எந்த விதக் தொந்தரவும் இல்லாமல், சட்டெனப் பஞ்சு போலச் செய்யக்கூடிய இந்த ரெசிபி, உங்கள் தினசரி உணவில் ஒரு புத்துணர்ச்சியான மாற்றத்தைக் கொண்டு வரும். வீட்டில் மாவு தீர்ந்து விட்டது, சட்டென என டிபன் செய்வது என யோசித்தீர்கள் என்றால் இந்த வெள்ளரிக்காய் இட்லியை ஒருமுறை டிரை பண்ணி பாருங்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட மிகவும் ஏற்ற ஒரு உணவு.
27
வெள்ளரிக்காய் இட்லியின் சிறப்பு:
உளுந்து, அரிசி ஊற வைத்து, அரைத்து, மாவை புளிக்க வைக்கும் தேவையில்லை. உடனடியாக சட்டென இந்த டிபனை தயார் செய்து விடலாம். செய்வதும் ஈஸி, நேரமும் குறைவு. வெள்ளிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது என்பதால் கோடைக் காலத்திற்கும், செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கும் ஏற்ற மிகச் சிறந்த உணவு. இதில் குறைந்த கலோரி மட்டுமே உள்ளதால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு.
துருவிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ரவை, துருவிய வெள்ளரிக்காய் (சாற்றுடன்) மற்றும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும். வெள்ளரிக்காயில் உள்ள நீரிலேயே ரவை நன்றாக ஊறிவிடும். தேவைப்பட்டால் மட்டும் 2 ஸ்பூன் தயிர் அல்லது தெளிக்க தண்ணீர் பயன்படுத்தலாம். இக்கலவையை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
57
வாசனையைக் கூட்டும் தாளிப்பு:
வாணலியில் 1 ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம் மற்றும் நறுக்கிய கறிவேப்பிலையைத் தாளிக்கவும். இந்தத் தாளிப்பை ஊறவைத்த ரவை-வெள்ளரிக்காய் கலவையில் கொட்டி, தேவையான அளவு கல் உப்பு சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
67
அவிக்கும் முறை மற்றும் நுட்பங்கள்:
இட்லி தட்டுகளில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் தடவி, தயார் செய்த மாவை ஊற்றவும். இட்லி பாத்திரத்தில் மிதமான தீயில் 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.
டிப்ஸ்: வெந்ததும் உடனடியாக எடுக்காமல், 2 நிமிடங்கள் கழித்து ஸ்பூன் அல்லது கத்தியால் எடுத்தால் இட்லி தட்டில் ஒட்டாமல் பூ போல வரும்.
77
சுவையை இரட்டிப்பாக்கும் காம்பினேஷன் :
சூடான வெள்ளரிக்காய் இட்லியின் மேல் ஒரு ஸ்பூன் சுத்தமான பசு நெய் ஊற்றி பரிமாறவும். காரசாரமான தக்காளி வெங்காய சட்னி அல்லது கொத்தமல்லி-புதினா சட்னியுடன் சாப்பிடும் போது இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.