Cool Drinks: தினமும் கூல்டிரிங்க்ஸ் குடிக்கிறீங்களா? உடம்புக்குள்ள நடக்கும் 'அந்த' அதிர்ச்சி மாற்றம்!

Published : Aug 07, 2026, 03:16 PM IST

Cool Drinks: கூல் டிரிங்க்ஸ் குடிப்பது இப்போது அன்றாட பழக்கமாகிவிட்டது. ஜில்லென்றும், இனிப்பாகவும் இருப்பதால் பலரும் இதை விரும்பி குடிக்கிறார்கள். ஆனால் தினமும் கூல் டிரிங்க்ஸ் குடித்தால் நம் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

PREV
15
தினமும் கூல்டிரிங்க்ஸ் குடித்தால் என்ன ஆகும்?

இப்போதெல்லாம் பலரும் கூல்டிரிங்க்ஸை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிவிட்டார்கள். சாப்பிடுவதற்கு முன், சாப்பிட்ட பிறகு, உறவினர் வீட்டுக்குச் சென்றால், வெளியே சென்றால், வெயிலில் இருந்து வீட்டுக்கு வந்தால்... என கூல்டிரிங்க்ஸ் குடிப்பது ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. ஆனால், இந்த பழக்கம் உடலின் பல உறுப்புகளை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் இவற்றைக் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

25
சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்பு

கூல்டிரிங்க்ஸ்களில் சர்க்கரை மிக அதிக அளவில் இருக்கிறது. ஒரு கூல் டிரிங்கில் உள்ள சர்க்கரையின் அளவு, ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான அளவை விட அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அதிகப்படியான சர்க்கரை உடலுக்குள் சென்றதும், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென உயரும். 

இதனால், கணையம் அதிக இன்சுலினைச் சுரக்க வேண்டியிருக்கும். இந்த செயல்முறை தொடர்ந்து நடந்தால், உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இது எதிர்காலத்தில் டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

35
உடல் எடை அதிகரிக்கும் அபாயம்

தினமும் கூல்டிரிங்க்ஸ் குடிப்பவர்களுக்கு உடல் எடை கூடும் வாய்ப்புகள் அதிகம். திரவ வடிவில் உள்ள சர்க்கரை, வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரம் தராது. இதனால், தேவைக்கு அதிகமான கலோரிகள் உடலுக்குள் சேர்கின்றன. இந்த கூடுதல் ஆற்றல், கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. குறிப்பாக, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் ஏற்படுகிறது. இந்த அதிக எடை, இதய நோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

45
பற்களின் ஆரோக்கியம் பாதிப்பு

கூல் டிரிங்க்ஸ்களில் உள்ள அமிலங்கள் பற்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. அடிக்கடி கூல் டிரிங்க்ஸ் குடிப்பதால், பற்களின் மீதுள்ள எனாமல் படலம் பலவீனமடைகிறது. இதனால் பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம் போன்ற பிரச்னைகள் வரலாம். 

அதிக சர்க்கரை உள்ள கூல் டிரிங்க்ஸ் கல்லீரலையும் பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, ஃபிரக்டோஸ் (Fructose) போன்ற சர்க்கரையை அதிகமாக எடுத்துக்கொள்வதால், கல்லீரலில் கொழுப்பு சேர வாய்ப்புள்ளது. இதை 'நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்' (Non-alcoholic fatty liver) என்று குறிப்பிடுகிறார்கள்.

55
தூக்கத்தில் பாதிப்பு

சிலர் கூல் டிரிங்க்ஸ் குடித்தால் உடனடியாக ஆற்றல் கிடைத்தது போல் உணர்வதாகச் சொல்வார்கள். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு வேகமாக உயர்வதே இதற்குக் காரணம். ஆனால், சிறிது நேரத்திலேயே அதே வேகத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்து, சோர்வு மற்றும் பசி அதிகரிக்கும். காஃபின் (Caffeine) உள்ள சில கூல் டிரிங்க்ஸ் தூக்கத்தையும் பாதிக்கும்.

 குறிப்பாக, இரவு நேரங்களில் இவற்றைக் குடிப்பதால், தூக்கத்தின் தரம் குறைய வாய்ப்புள்ளது. தாகத்தைத் தணிக்க சாதாரண தண்ணீர், இளநீர், சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள், மோர் போன்ற இயற்கை பானங்களைத் தேர்ந்தெடுப்பதே நல்லது என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories