Love Marriage: உங்க லவ்வுக்கு வீட்ல சம்மதிக்கலயா? இப்படி செய்யுங்க டக்குனு ஒகே சொல்வாங்க.. ஸ்மார்ட் டிப்ஸ்!

Published : Aug 07, 2026, 06:22 PM IST

Love Marriage: காதல் திருமணத்துக்கு வீட்டில் சம்மதிக்கவில்லையா? பெற்றோரின் மனதை வெல்வது எப்படி, என்ன தவறுகளைத் தவிர்க்க வேண்டும், குடும்பத்தின் சம்மதத்தைப் பெற சில எளிய மற்றும் சூப்பரான டிப்ஸ் இதோ.

PREV
17
வீட்டில் லவ் மேரேஜுக்கு கிரீன் சிக்னல் வாங்குவது எப்படி?
காதலிச்சு கல்யாணம் பண்றது நல்லாத்தான் இருக்கும். ஆனா பல நேரங்கள்ல, வீட்டுல சம்மதம் வாங்குறதுதான் பெரிய போராட்டமா இருக்கும். ஜாதி, மதம், குடும்ப கௌரவம், பொருளாதாரம்னு பல காரணங்களைச் சொல்லி பெற்றோர் மறுக்கலாம். இந்த மாதிரி நேரத்துல கோபப்படுறதையோ, சண்டை போடுறதையோ விட்டுட்டு, பொறுமையா பேசி நம்பிக்கை வாங்குறதுதான் முக்கியம். அதுக்கு என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்.
27
முதலில் யாரிடம் பேசுவது?
வீட்ல எல்லார்கிட்டயும் ஒரேடியா விஷயத்தைச் சொல்றதுக்கு பதிலா, உங்களை நல்லா புரிஞ்சுக்கிற ஒருத்தர்கிட்ட முதல்ல பேசுங்க. அது அம்மாவா இருக்கலாம், அப்பாவா, அண்ணன், அக்காவா கூட இருக்கலாம். உங்க பார்ட்னரை ஏன் பிடிச்சது, ஏன் கல்யாணம் பண்ணிக்க விரும்புறீங்கன்னு அமைதியா எடுத்துச் சொல்லுங்க. அவங்க மத்தவங்களை சமாதானப்படுத்த உங்களுக்கு உதவலாம்.
37
திடீர்னு ஷாக் கொடுக்காதீங்க
கல்யாண முடிவை திடீர்னு சொன்னா, அவங்களை நீங்க மதிக்கலன்னு ஆகிடும். அதனால, முதல்ல உங்க பார்ட்னரோட குணம், படிப்பு, வேலை, குடும்பம் பத்தி கொஞ்சம் கொஞ்சமா வீட்ல சொல்ல ஆரம்பிங்க. அப்புறம் ஒரு நல்ல நேரம் பார்த்து எல்லோரையும் சந்திக்க வைங்க. அதுக்கப்புறம் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கலாம்.
47
பெற்றோர் ஏன் எதிர்க்கிறார்கள்?
வீட்ல ஏன் எதிர்க்கிறாங்க, எதுக்கு சம்மதிக்க மாட்றாங்கன்னு முதல்ல புரிஞ்சுக்கோங்க. ஜாதி, மதம், வேலை, பண வசதி, வயசு வித்தியாசம் இல்லனா குடும்பப் பின்னணின்னு எது வேணும்னாலும் அவங்க கவலையா இருக்கலாம். காரணத்தைத் தெரிஞ்சுகிட்டா, அதுக்கு ஏத்த மாதிரி சரியா பதில் சொல்ல முடியும்.
57
உங்கள் பொறுப்பை புரிய வையுங்கள்
'நாங்க ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப லவ் பண்றோம்'னு சொல்றது மட்டும் போதாது. கல்யாணத்துக்குப் பிறகு வாழ்க்கை, வேலை, நிதிப் பொறுப்பு, எங்கே தங்குவது, குடும்பத்தை எப்படிப் பார்த்துக்கொள்வதுன்னு உங்க திட்டங்களை எடுத்துச் சொல்லுங்க. நீங்க பொறுப்பா நடந்துக்கிறது, அவங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.
67
நம்பிக்கையான உறவினர் உதவி
சில சமயம், நீங்க சொல்றதை விட, உங்க குடும்பத்துல மதிக்கிற ஒரு உறவினர் அல்லது நண்பர் சொன்னா பெற்றோர் கேட்பாங்க. உங்க உறவைப் புரிஞ்சிக்கிற, அதே சமயம் வீட்டில் எல்லோரும் மதிக்கிற ஒருத்தர் உதவியோட உங்க கருத்தைச் சொல்லுங்க. ஆனா, ஒரே நேரத்துல பல பேரை வச்சு அழுத்தம் கொடுக்காதீங்க.
77
எக்காரணம் கொண்டும் பொறுமை இழக்காதீர்

நீங்க கோபமா பேசினாலோ, 'அவங்களதான் கல்யாணம் பண்ணிப்பேன்'னு பிடிவாதம் பிடிச்சாலோ, வீட்ல சம்மதிக்கவே மாட்டாங்க. ஆனா, நீங்க நிதானமா, அமைதியா, எல்லோருக்கும் நம்பிக்கை வர்ற மாதிரி பேசினா, உங்க பொறுப்பு அவங்களுக்குப் புரியும். அப்புறம் பாருங்க, அவங்களே முன்னாடி நின்னு உங்க கல்யாணத்தை நடத்தி வைப்பாங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories