இரவில் தூக்கமில்லாமல் தவிக்கிறீங்களா? இந்த 5 விஷயங்களை உடனே செய்யுங்க!

Published : May 20, 2026, 12:38 PM IST

பகல்ல எல்லாம் கண்ணைச் சுழட்டுது, ஆனா நைட்டு படுக்கையில படுத்தா மட்டும் தூக்கம் வர மாட்டேங்குதுப்பா! இதுதான் இன்னைக்கு 10-ல 8 பேரோட புலம்பல். மாத்திரை இல்லாம, மொபைல் பார்க்காம, இயற்கையா நிம்மதியான தூக்கத்தைப் பெற 5 சூப்பரான டிப்ஸ் இதோ!

PREV
15
தூக்கம் வரலையா? படுக்கையை விட்டு எழுந்திருங்க!

படுக்கையில் படுத்து 20 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் தூக்கம் வரவில்லை என்றால், வற்புறுத்திக் கண்ணை மூடிக் கொண்டு அங்கேயே கிடக்காதீர்கள். அது உங்களுக்குப் பதற்றத்தைத்தான் கூட்டும். உடனே படுக்கையை விட்டு எழுந்து வேறு அறைக்குச் செல்லுங்கள். மங்கலான வெளிச்சத்தில் ஒரு புத்தகத்தை வாசியுங்கள். தூக்கம் சொக்கும் போது மட்டும் மீண்டும் படுக்கைக்கு வாருங்கள்.

25
"நான் தூங்கவே மாட்டேன்" என்று சொல்லுங்கள்!

இது ஒரு சைக்காலஜி ட்ரிக். "எனக்குத் தூக்கம் வரணுமே" என்று நீங்கள் நினைக்க நினைக்க மூளை விழிப்படைந்து கொண்டே இருக்கும். அதற்குப் பதிலாக, கண்களை அகல விரித்துக் கொண்டு, "நான் அடுத்த 10 நிமிஷத்துக்குத் தூங்கவே மாட்டேன், முழிச்சுட்டேதான் இருப்பேன்" என்று உங்களுக்குள் சவால் விடுங்கள். மூளை சோர்வடைந்து, உங்களையும் அறியாமல் உங்களைச் சீக்கிரம் தூங்க வைத்துவிடும்!

35
'4-7-8' மூச்சுப் பயிற்சி

60 வினாடிகளில் உடலை ரிலாக்ஸ் ஆக்குங்க! படுத்துக்கொண்டே இந்த எளிய யோகா முறையைச் செய்யுங்கள்: 4 வினாடிகள் மூச்சை மூக்கு வழியாக உள்ளே இழுங்கள். 7 வினாடிகள் மூச்சை அப்படியே உள்ளே அடக்கி வையுங்கள். 8 வினாடிகள் வாயின் வழியாக 'உஷ்' என்ற சத்தத்துடன் மெதுவாக மூச்சை வெளிவிடுங்கள். இதை 4 முறை செய்தாலே இதயத்துடிப்பு சீராகி, நரம்புகள் அமைதியாகி தூக்கம் கண்களைத் தழுவும்.

45
'நைலான்' துணிகளுக்கு நோ!

நம்மில் பலர் நைலான் அல்லது பாலியஸ்டர் ஆடைகளை அணிந்து தூங்குவோம். இவை உடலின் வெப்பத்தை வெளியேற்றாமல் படுக்கையைச் சூடாக்கும். இதனால் உடல் அசௌகரியமாகி தூக்கம் கெடும். தூங்கும் போது 100% தளர்வான காட்டன் (Cotton) ஆடைகளை மட்டுமே அணியுங்கள். உடல் குளுமையாக இருந்தால் மூளை தானாகவே தூக்கத்திற்கான 'மெலடோனின்' ஹார்மோனை சுரக்கும்.

55
நாளைய திட்டத்தை எழுதி வைங்க!

"நாளைக்கு ஆபீஸ்ல அந்த ஃபைல் சப்மிட் பண்ணணுமே, காலைல சீக்கிரம் எந்திரிக்கணுமே" என்ற கவலைகள் தான் தூக்கத்தைக் கெடுக்கும். படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டைரியை எடுத்து, நாளைக்குச் செய்ய வேண்டிய வேலைகளையும் உங்கள் கவலைகளையும் அப்படியே எழுதி வைத்து விடுங்கள். "எல்லாத்தையும் டைரில எழுதியாச்சு, நாளைக்கு பாத்துக்கலாம்" என்று மூளை நிம்மதியாகிவிடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories