பெட்ரோல் பங்க் போனாலே பதற்றமா? "500 ரூபாய்க்கு போட்டது அதுக்குள்ள தீந்துடுச்சா" எனப் புலம்பும் வாகன ஓட்டிகளில் நீங்களும் ஒருத்தரா? கவலை வேண்டாம்! இந்த 6 எளிய ஸ்மார்ட் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. மாசக் கடைசியில் உங்களுக்கே நல்ல வித்தியாசம் தெரியும்!
மிகவும் எளிமையான அறிவியல் இது! மதிய வெயிலில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது பெட்ரோல் விரிவடைந்து (Expand) அடர்த்தி குறையும். அந்த நேரத்தில் பெட்ரோல் போட்டால் காசுக்குக் குறைவான அளவு தான் வண்டியில் ஏறும். காலையிலோ அல்லது இரவிலோ குளுமையாக இருக்கும் போது பெட்ரோல் போட்டால் முழு அளவு மற்றும் மைலேஜ் கிடைக்கும்!
26
மொபைல் மேப் 'ரூட்' பிளான்!
ஆபீசுக்கு தினமும் போற வழி தானே என்று மேப் பார்க்காமல் கிளம்பாதீங்க. போகும் வழியில் டிராஃபிக் ஜாம் இருந்தால், வண்டி 'ஐட்லிங்'கில் (Idle) நின்று பெட்ரோலை உறிஞ்சிவிடும். கிளம்பும் போதே மேப் ஆன் செய்து, 'டிராஃபிக் இல்லாத மாற்றுப் பாதை' (Alternative Route) வழியாகச் சென்றால் நேரமும் மிச்சம், எரிபொருளும் மிச்சம்.
36
தேவையில்லாத பாரம்!
நம்மில் பலர் காரின் டிக்கியிலோ அல்லது பைக்கின் பாக்ஸிலோ தேவையில்லாத பழைய பொருட்கள், ஹெல்மெட்டுகள், டூல் பாக்ஸ்களை அப்படியே போட்டு வைத்திருப்போம். வண்டியின் எடை கூடக் கூட, இன்ஜினுக்கு அதிக லோடு ஏற்பட்டு பெட்ரோல் குடிப்பது அதிகரிக்கும். வண்டியை லைட்டாக வையுங்கள், மைலேஜை அள்ளுங்கள்!
டயர்களில் காற்று கம்மியாக இருந்தால், வண்டி இழுக்க அதிக பெட்ரோல் தேவைப்படும். சாதாரண காற்றுக்கு பதிலாக 'Nitrogen' காற்றை நிரப்புங்கள். இது டயர் சூடாவதைத் தடுத்து, நீண்ட நாட்களுக்கு காற்றின் அழுத்தத்தைச் சீராக வைக்கும். இதனால் இன்ஜின் ஸ்மூத்தாகி, மைலேஜ் 5% முதல் 8% வரை அதிகரிக்கும்.
56
விண்டோஸ் vs ஏசி
நகரத்திற்குள் மெதுவாகச் செல்லும் போது ஏசியை ஆஃப் செய்து விட்டு கண்ணாடியை இறக்கி வைக்கலாம். ஆனால், ஹைவேஸில் 80 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் போது கண்ணாடியைத் திறந்து வைத்தால், காற்று காருக்குள் புகுந்து வண்டியைப் பின்னோக்கி இழுக்கும் (Aerodynamic drag). இதனால் ஏசி போடுவதை விட அதிக பெட்ரோல் செலவாகும்! ஹைவேஸில் ஏசி-யே பெஸ்ட்.
66
சும்மா கார்டு ஸ்வைப் பண்ணாதீங்க!
இப்போது முன்னணி பெட்ரோல் பங்க்குகள் மற்றும் வங்கிகள் இணைந்து 'Fuel Co-branded Credit/Debit Cards' வழங்குகின்றன. இந்த கார்டுகளைப் பயன்படுத்தி பெட்ரோல் போடும் போது 2% முதல் 5% வரை கேஷ்பேக் அல்லது ரிவார்டு பாயிண்டுகள் கிடைக்கும். இதன் மூலம் மறைமுகமாக மாசம் சில நூறு ரூபாய்களைச் சேமிக்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.