Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!

Published : May 18, 2026, 02:59 PM IST

Guru Peyarchi Palangal: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான். அடுத்த 60 நாட்களில் குபேர வளம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
15
Guru Peyarchi Palangal

ஜோதிடத்தின்படி, ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 19 வரை குரு பகவான் பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவானின் அருளால் இந்த 60 நாட்கள், குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் கிடைக்கப் போகிறது. இந்த யோகம் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் அள்ளித் தர இருக்கிறது. இவர்களுக்கு பண வரவு, புதிய வேலை வாய்ப்பு, சுப காரியங்கள் என அனைத்தும் சிறப்பாக நடக்கும். அந்த ராசிகள் பற்றி இங்கு காணலாம்.

Gajakesari Yoga 2026: நேரடியாக விழும் குரு பார்வை.! கஜகேசரி ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு இனி ஏறுமுகம் தான்.!

25
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த குருவின் நட்சத்திர மாற்றம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த சுப காரியங்கள் இனி தடங்கல் இல்லாமல் நடக்கும். இவர்களின் நிதி நிலைமை முன்பை விட நன்றாக இருக்கும். பேங்க் பேலன்ஸை உயர்த்தி, சேமிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த 60 நாட்களில் புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நனவாக வலுவான வாய்ப்புகள் உள்ளன. அலுவலகத்தில் இவர்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?

35
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மன அமைதியையும், பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வரும். நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கும், நல்ல வேலைக்காக காத்திருந்தவர்களுக்கும் பெரிய நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்பு வரும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் அல்லது தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் முதலீடு செய்ய இது சரியான நேரம். குடும்பத்தில் சில காலமாக இருந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து, மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

45
தனுசு

தனுசு ராசிக்காரர்கள் குருவின் இந்த சஞ்சாரத்தின் போது, தன்னம்பிக்கையிலும் தைரியத்திலும் மிகப்பெரிய வளர்ச்சியை காண்பார்கள். இவர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதால், வாழ்க்கையில் வரும் எந்த சவாலையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த காலகட்டம் குறிப்பாக சாதகமாக இருக்கும், அவர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக அரசு வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு இந்த 60 நாட்களில் நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.

55
மீனம்

மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் குருவின் அருளால் அனைத்து ஆசீர்வாதங்களையும், அபரிமிதமான செல்வத்தையும் பெறுவார்கள். இவர்கள் தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சாதகமான பலன்களையேத் தரும். நீண்ட காலமாக இவர்களை மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வாட்டி வதைத்த பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். எதிர்பாராத பண லாபம் மற்றும் அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்ட வாய்ப்புள்ளது. வீடு, வாகனம் வாங்கும் யோகம் இவர்களுக்கு பலமாக உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories