Tips to identify artificial Mangoes : மாம்பழ சீசன் தற்போது தொடங்கிவிட்டது. இந்த சீசனில் கல் வைத்து பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.
இப்போதெல்லாம் எல்லாத்துலயும் கலப்படம். உங்களுக்குப் பிடிச்ச மாம்பழத்துலகூட கெமிக்கல் இருக்கலாம். மாம்பழம் சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கணும்னா, முதல்ல அதுல கெமிக்கல் இருக்கானு டெஸ்ட் பண்ணிடுங்க. மாம்பழம் இயற்கையாக பழுக்க யாருக்கும் பொறுமை இல்லை. காய்களைப் பறித்து, செயற்கையாக பழுக்க வைக்கிறார்கள். இதற்கு கால்சியம் கார்பைடு பயன்படுத்துகிறார்கள். இது மாம்பழத்திற்கு நல்ல மஞ்சள் நிறத்தையும் பளபளப்பையும் கொடுக்கும். இதைப் பார்த்துதான் வாடிக்கையாளர்கள் ஏமாந்து வாங்குகிறார்கள்.
24
செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்
கால்சியம் கார்பைடு, அசிட்டிலீன் (acetylene) என்ற வாயுவை வெளியிடுகிறது. இது இயற்கையாக பழம் பழுப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும். ஆனால், இந்த கெமிக்கல் பழத்தில் நச்சுப் பொருட்களை விட்டுவிடும். இந்த மாதிரி பழங்களை அடிக்கடி சாப்பிட்டால், எரிச்சல், தலைசுற்றல், மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகள் வரலாம். மார்க்கெட்டிலிருந்து வாங்கிய மாம்பழத்தில் கால்சியம் கார்பைடு இருக்கிறதா என எலுமிச்சையை வைத்து கண்டுபிடிக்கலாம்.
34
கண்டுபிடிப்பது எப்படி?
ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பாதி எலுமிச்சையை மாம்பழத்தின் காம்புப் பகுதியில் ஐந்து வினாடிகளுக்கு நன்றாகத் தேய்க்க வேண்டும். எலுமிச்சையை வைத்து தேய்த்ததும், மாம்பழ காம்பில் நிறம் மாறுகிறதா என்று கவனியுங்கள். ஒருவேளை, அந்த இடம் நீலம் அல்லது ஊதா நிறத்திற்கு மாறினால், அதில் கெமிக்கல் சேர்த்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அதாவது, கால்சியம் கார்பைடு பயன்படுத்தி பழுக்க வைத்திருக்கிறார்கள். நிறம் மாறவில்லை என்றால், அது இயற்கையாக பழுத்த பழம். பயப்படாமல் சாப்பிடலாம்.
இயற்கையாக பழுத்த மாம்பழம், நல்ல இனிமையான வாசனை தரும். அதில் எந்த கெமிக்கல் வாசனையும் இருக்காது. லேசாக அழுத்திப் பார்த்தால் மென்மையாக இருக்கும். எப்போதும் நம்பிக்கையான கடைகளில் மாம்பழம் வாங்குவது நல்லது. மாம்பழத்தை வீட்டுக்குக் கொண்டு வந்ததும், கழுவாமல் சாப்பிடாதீர்கள். நல்ல தண்ணீரில் அதைச் சுத்தம் செய்துவிட்டு சாப்பிடுங்கள். பழத்தின் காம்புப் பகுதியை லேசாக வெட்டிவிட்டு, ஒரு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால், மாம்பழத்தின் சூடு குறையும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.