MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை.! இந்த 8 ராசிகளுக்கு கஷ்டம் எல்லாம் தீரப்போகுது.! 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை.! இந்த 8 ராசிகளுக்கு கஷ்டம் எல்லாம் தீரப்போகுது.! 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

Weekly Horoscope 2026 in Tamil Predictions : மே 18, 2026 முதல் மே 24, 2026 கிரகங்களின் நிலையால் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் என இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

5 Min read
Author : Ramprasath S
Published : May 18 2026, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
Weekly Horoscope 2026 in Tamil Predictions
Image Credit : Getty

Weekly Horoscope 2026 in Tamil Predictions

Intha Vara Rasi Palan : மே 2026-ன் மூன்றாவது வாரம், 18 முதல் 24-ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த வாரத்தில் பெரிய கிரகப் பெயர்ச்சிகள் எதுவும் இல்லை. சந்திரன் மட்டுமே ஒவ்வொரு இரண்டரை நாட்களுக்கும் ராசி மாறுகிறார். இந்த வாரம் சூரியன் ரிஷபத்திலும், செவ்வாய் மற்றும் புதன் மேஷத்திலும், சுக்கிரன் மற்றும் குரு மிதுனத்திலும், ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், சனி மீனத்திலும் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலைகளால் உங்கள் வாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
214
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முக்கிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெறுகிறார். இதன் காரணமாக நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். குடும்ப சுமைகள் குறையும். உங்கள் தேவைக்கு ஏற்ற பணம் கிடைக்கும். பொருளாதாரம் உயரும். பெற்றோருடன் இருந்த மனக்கசப்புகள் மறையும். திருமண முயற்சியில் இருந்த தடைகள் விலகும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. சிலர் சொத்துக்களையும் வாங்குவீர்கள். சிலருக்கு பெண்களால் தேவையற்ற மன உளைச்சல் உருவாகும்.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடவும்.

Gajakesari Yoga 2026: நேரடியாக விழும் குரு பார்வை.! கஜகேசரி ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு இனி ஏறுமுகம் தான்.!

Related Articles

Related image1
Gajakesari Yoga 2026: நேரடியாக விழும் குரு பார்வை.! கஜகேசரி ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு இனி ஏறுமுகம் தான்.!
Related image2
Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?
314
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

இந்த வாரம் சுக ஸ்தான அதிபதி சூரியனும், இரண்டு ஐந்தாம் வீட்டின் அதிபதி புதனும் இணைந்து புதாதித்ய யோகம் ஏற்படுகிறது. கோச்சார கிரகங்களின் சஞ்சாரம் ரிஷப ராசிக்கு மிகவும் சாதகமாக உள்ளது. எனவே இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பேச்சில் தெளிவு பிறக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். பண பற்றாக்குறை அகலும். சிலருக்கு மறுமணம் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புது தங்கம் வெள்ளி வாங்கும் யோகம் உண்டு. பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் விலகி, உங்களுடைய பங்குகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஏழை, எளிய பெண்களுக்கு ஆடை அல்லது உணவு தானம் அளிக்கவும்.

Zodiac Signs: மே 17 முதல் இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! கூரையை பிச்சிட்டு பணம் கொட்டப்போகுது.!

414
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். ஜென்ம குருவாக பலன் கொடுத்துக் கொண்டிருந்த குரு பகவான் சில நாட்களில் தன குருவாக பலன் கொடுக்கப் போகிறார். எனவே உங்களுக்கு பொருளாதார சுணக்கம் விலகி, நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தின் தேவைகள் நிறைவேறும். வீடு கட்டும் யோகம் உண்டாகும். தங்கம் வெள்ளிகளை வாங்குவீர்கள். சொத்து தொடர்பான தடைகள் விலகும். திருமண முயற்சிகள் நிறைவேறும். கணவனால் மனைவிக்கு ஆதாயம் மற்றும் அனுகூலம் உண்டாகும். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு இடம் பெற வாய்ப்பு உள்ளது. கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றிகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: வயதானவர்களின் மருத்துவ தேவைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.

514
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதியான சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் புதனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இதன் காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு தடைபட்ட காரியங்கள் அனைத்தும் சித்தியாகும். உங்கள் வாழ்வில் புதுமையும், புத்துணர்ச்சியும் உண்டாகும். விவேகம் ஏற்படும். தொட்டது அனைத்தும் துலங்கும். வேலையில் இடம் மாற்றம் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும். எட்டாம் இடத்தில் ராகு இருப்பதால் திருமண முயற்சிகளில் கவனம் தேவை. இந்த வாரம் சுப விரயங்கள் அதிகமாகும்.

பரிகாரம்: பசுவுக்கு காய்கறிகள் அல்லது கீரை தானம் வழங்கவும்.

614
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

உங்கள் ராசியின் அதிபதியான சூரிய பகவான் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். விரய ஸ்தானத்தில் குரு பகவான் உச்சமடைவதால், புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. தம்பதிகள் தொழில் நிமித்தமாக பிரிந்து வாழக்கூடும். பழைய சொத்துக்களை விற்கும் நிலை கூட ஏற்படலாம். எந்த காரியமாக இருந்தாலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்ப விஷயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த வாரம் வேலைப்பளு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

பரிகாரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.

714
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

கன்னி ராசியின் லாப ஸ்தானத்தில் குரு பகவான் நுழைகிறார். இது இழந்த இன்பங்களை மீட்டுத் தரும் யோகமாகும். சிறிதாக தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவுபடுத்தும் காலம் உருவாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோச்சார சனி பகவான் உங்கள் திட்டம் மற்றும் முயற்சிகளில் வெற்றி பெற உதவி செய்வார். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். மாணவர்கள் அரியர்ஸ் பாடத்தை எழுதி பாஸ் செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும். திருமணத்திலிருந்து தடைகள் அகலும். மருமகள், மருமகன் பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

பரிகாரம்: ஆதரவில்லாத குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள்.

814
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

குரு பெயர்ச்சிக்குப் பின்னர் தன ஸ்தானத்தில் குரு பார்வை பதிய இருக்கிறது. இதன் காரணமாக தன பிரார்த்தம் உண்டாகும். பொருளாதார மேன்மை கிட்டும். இருப்பினும் சிந்திக்கும் திறன் குறையலாம். அவசரமின்றி நிதானமாக செயல்படவும். பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ளவும். சிலர் பணியில் இருந்து ஓய்வு பெறலாம். மனக்கசப்பில் பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். 18-05-2026 இரவு வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடன் பிறந்தவருடன் சொத்துக்கள் தொடர்பான பேச்சுவார்த்தைளை தவிர்க்கவும். வரன் அமைவதில் சிலருக்கு சிக்கல் உருவாகலாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

பரிகராம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுங்கள்.

914
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

இந்த வாரம் செவ்வாய் ஆட்சி பலம் பெறுவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய சந்தர்ப்பங்கள் தேடி வரும். எதிர்காலம் பற்றிய நம்பிக்கை அதிகரிக்கும். வம்பு வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பலன்கள் கிடைக்கும். செல்வம் அதிகரிக்கும். விவசாய நிலத்திற்கு புதிய குத்தகைகள் கிடைக்கும். பெண்களின் சுய தொழில் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட துன்பங்கள் அகலும். 18-05-2026 அன்று இரவு 10:05 முதல் 20-05-2026 அன்று இரவு 10:39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படலாம் என்பதால் நிதானத்துடன் செயல்படுங்கள்.

பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட நிம்மதி அதிகரிக்கும்.

1014
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டிய வாரமாகும். ராசிக்கு குரு, சுக்கிரன் மற்றும் சனியின் பார்வை இருப்பதால் கடன் சுமை குறையும். புதிய வழிகள் உண்டாகும். திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற இருக்கும் ராசியின் அதிபதியான குரு பகவானின் பார்வை சனியின் மீது விழுவதால் அடுத்தாஷ்டம சனியின் தாக்கம் குறையும். சுப திட்டங்களில் முதலீடுகள் செய்வீர்கள். நோய்கள் அகலும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. 20-05-2026 அன்று இரவு 10:39 மணி முதல் 22-05-2026 அன்று நள்ளிரவு வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் உபாதைகள் தோன்றி மறையலாம். வழக்கு விவகாரங்கள் மற்றும் சொத்து தொடர்பான முயற்சிகளை தள்ளி வைக்கவும்.

பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது.

1114
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

இந்த வாரம் சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வாரமாக இருக்கும். சூரிய பகவான் புதனுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சற்று பின்னடைவுகள் ஏற்படலாம். மனம் அலைபாயும். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர வேண்டும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திவைக்க வேண்டும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் வில்லங்கங்கள் ஏற்படலாம். சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம். வீடு, வாகனம் தொடர்பான இடமாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் குரு பெயர்ச்சிக்கு பின்னர் குரு பார்வை கிடைக்கப் போவதால் கடந்த கால நெருக்கடிகள் நீங்கும். சகோதரர் வழி சகாயம் உண்டாகும். சம்பள பாக்கிகள் வந்து சேரும். தங்க ஆபரண சேர்க்கை உண்டாகும்.

பரிகாரம்: வீரபத்திரரை வழிபடுவது நல்லது.

1214
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

இந்த வாரம் ராசியின் அதிபதியான சனி பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மேன்மை கிடைக்கும். சிந்தனையில் உருவான தடைகள் அகலும். உங்கள் முயற்சிகள் பலனளிக்கும். புதிய உத்வேகம் கிடைக்கும். நிலவிய சங்கடங்கள் விலகும். அரசாங்க காரியங்களில் ஏற்பட்ட தடைகள் அகலும். அரசு உதவித்தொகை கிடைக்கும். திடீர் பணவரவு உண்டாகும். குடும்பத்திலும் தொழிலிலும் திருப்திகரமான முன்னேற்றம் உண்டாகும். உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலா அல்லது வெளிநாடு சுற்றுலா சென்று வர வாய்ப்புகள் உண்டாகும். கண் திருஷ்டியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: சிவாலயங்களுக்கு நல்லெண்ணெய் தானம் வழங்கவும்.

1314
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

குரு பெயர்ச்சிக்குப் பின்னர் ராசியின் அதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற இருக்கிறார். இதன் காரணமாக மன தைரியம் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். எதிர்வரும் தடைகளை சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். தோற்றம் பொலிவு பெறும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வேலையில் திறமை கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயம் ஒன்று கைகூடி வரும். இதுவரை தயங்கி செய்த பல செயல்களை அதிரடியாக இறங்கி செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டகரமான நிகழ்வுகள் நடக்கும். மன சஞ்சலங்கள் அகலும். வராமல் இருந்த கடன்கள் வசூலாகும். அடமானம் வைத்திருக்கும் நகைகளை மீட்கும் சந்தர்ப்பங்கள் உண்டாகும்.

பரிகாரம்: நரசிம்மரை வழிபட வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும்.

1414
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: கோடீஸ்வர யோகத்தை தரும் பெயரின் முதல் எழுத்து.! உங்கள் பெயரில் இந்த 3 எழுத்துக்கள் இருந்தால் 30 வயதிற்குள் நீங்களும் அம்பானி.!
Recommended image2
Gajakesari Yoga 2026: நேரடியாக விழும் குரு பார்வை.! கஜகேசரி ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு இனி ஏறுமுகம் தான்.!
Recommended image3
Today Rasi Palan: இன்று 6 ராசிகளுக்கு பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.! எச்சரிக்கை.! 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.!
Related Stories
Recommended image1
Gajakesari Yoga 2026: நேரடியாக விழும் குரு பார்வை.! கஜகேசரி ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு இனி ஏறுமுகம் தான்.!
Recommended image2
Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved