தற்போது நாம் அனைவரும் அவசரகால உலகில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். எப்படி என்று கேட்டால் சமைக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆகையால் ஏற்கனவே சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் சேமித்து, பிறகு மறுநாள் அதை சூடுப்படுத்தி சாப்பிடுகிறோம்.
26
உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்
இந்த பழக்கம் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது நேரத்தை மிச்சம் படுத்தும் என்றாலும், உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?
அந்தவகையில், பல பெண்கள் ஃப்ரிட்ஜில் மீந்து போன சாதத்தை சேமித்து வைப்பார்கள். ஆனால், அதை எத்தனை நாளைக்கு ஃப்ரிட்ஜில் வைக்கலாம்? அதிக நாள் வைத்து சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது போன்ற கேள்விக்கான பதில்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
நீங்கள் ஃப்ரிட்ஜில் சாதத்தை வைத்து பயன்படுத்த விரும்பினால், அதை கண்டிப்பாக இரண்டு நாட்களுக்குள் சாப்பிட்டு இருக்க வேண்டும். முக்கியமாக காற்று புகாதபடி ஒரு பாத்திரத்தில் சாதத்தை வைத்து பிறகு பிரிட்ஜில் வையுங்கள்.
ஒருவேளை ஃப்ரிட்ஜில் வைத்த சாதத்தில் இருந்து கெட்ட வாசனை வந்தால், அதை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். ஏனெனில் பாக்டீரியாக்கள் அதில் பெருகி இருக்கும். மீறி சாப்பிட்டால் ஃபுட் பாய்சன், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
66
ப்ரிட்ஜில் வைத்துவிட்டு அப்படியே சாப்பிக்கூடாது
குறிப்பாக, சாதத்தை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த உடனே சாப்பிடக்கூடாது. சிறிது நேரம் அறையின் வெப்பநிலையில் வைத்த பிறகுதான் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.