Tamil

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் 6 மேஜிக் பானங்கள்!

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், தினமும் குடிக்க வேண்டிய ஆறு முக்கிய பானங்கள் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

Tamil

மலச்சிக்கலுக்கான காரணங்கள்

தவறான உணவுப் பழக்கம், தண்ணீர் குறைவாகக் குடிப்பது, மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாமை போன்றவை மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

Image credits: Getty
Tamil

தினமும் குடிக்க வேண்டிய பானங்கள்

செரிமானத்திற்கு உதவி, மலச்சிக்கலைத் தவிர்க்க தினமும் குடிக்க வேண்டிய சில பானங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.

Image credits: Getty
Tamil

வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்

தினமும் காலையில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கலாம். எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

Image credits: Social Media
Tamil

சீரகத் தண்ணீர்

செரிமானப் பிரச்சனைகளுக்கு சீரகத் தண்ணீர் ஒரு சிறந்த தீர்வாகும். வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரைக் குடிப்பது மலச்சிக்கலைத் தடுக்கும்.

Image credits: Sandook
Tamil

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ் குடிப்பது குடலைத் தூண்டி, செரிமானத்திற்கு உதவும். குறைந்த அளவில் கற்றாழை ஜூஸ் குடிப்பது மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

சியா விதை தண்ணீர்

சியா விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. சியா விதைகளை ஊறவைத்த தண்ணீரைக் குடிப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Image credits: Asianet News
Tamil

இளநீர்

இளநீர், உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க உதவும் ஒரு சிறந்த பானம். இதில் உள்ள மெக்னீசியம், மலம் கழித்தலை எளிதாக்க உதவுகிறது.

Image credits: Pexels
Tamil

இஞ்சி டீ

இஞ்சி, செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று வலியைக் குறைக்கும். ஒரு கப் சூடான இஞ்சி டீ குடிப்பது, செரிமானத்தைத் தூண்டி, மலம் கழிப்பதை எளிதாக்கும்.

Image credits: Getty

Gold Rings: 5 கிராமில் சூப்பாரான 7 மோதிரம் டிசைன்கள்.!

1 Gram Gold Locket: 1 கிராமில் 7 அசத்தலான லாக்கெட் டிசைன்கள்.!

Terrace Vastu: மொட்டை மாடியில் இந்த 4 செடிகளை தப்பி தவறி கூட வச்சுடாதீங்க!

Earrings: 2 கிராம் தங்கத்தில் அசத்தல் கம்மல் டிசைன்ஸ்.!