MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Cobra Village: பாம்புகளோடு குடும்பம் நடத்தும் மனிதர்கள்! கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் கோப்ரா சிட்டி.. மிரள வைக்கும் பின்னணி!

Cobra Village: பாம்புகளோடு குடும்பம் நடத்தும் மனிதர்கள்! கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் கோப்ரா சிட்டி.. மிரள வைக்கும் பின்னணி!

Cobra: வியட்நாம் கோப்ரா கிராமத்தில் வீட்டுக்கு வீடு ஆயிரக்கணக்கில் நல்ல பாம்புகளை வளர்க்கிறார்கள். சும்மா பார்த்தாலே பயம் வரும் இந்த பாம்புகளை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 19 2026, 08:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கோப்ரா சிட்டி
Image Credit : Asianet News

கோப்ரா சிட்டி

வியட்நாமில் உள்ள வின் சன் கிராமத்திற்குள் நுழைந்தால், ஒவ்வொரு வீட்டிலும் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் பாம்புப் பெட்டிகளைக் கண்டு நாம் மிரண்டு போவது உறுதி. இங்கு வாழும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் முதன்மைத் தொழிலே நல்ல பாம்புகளை வளர்ப்பதுதான். சாதாரண வீடுகளில் கூட 1,000 முதல் 5,000 பாம்புகள் வரை சர்வசாதாரணமாகக் காணப்படுகின்றன. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆபத்தான தொழில் இங்கு பாரம்பரியமாக நடந்து வருவதால், இந்த ஊருக்கு உலகளவில் 'கோப்ரா சிட்டி' என்ற பெயரே வந்துவிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
100 பில்லியன் வருமானம் தரும் பாம்பு
Image Credit : Asianet News

100 பில்லியன் வருமானம் தரும் பாம்பு

இந்த கிராம மக்களுக்கு நல்ல பாம்புகள்தான் வாழ்வாதாரம். தலைமுறை தலைமுறையாக இவர்கள் பாம்பு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பாம்பின் இறைச்சி, தோல், முட்டை, விஷம் என அனைத்தையும் விற்று நல்ல வருமானம் பார்க்கிறார்கள். 2024-ல், வின் சன் கிராமத்தின் பாம்பு வர்த்தகம் 100 பில்லியன் வியட்நாம் டாங் (சுமார் 4 மில்லியன் டாலர்) அளவுக்கு உயர்ந்துள்ளது.

Fridge: உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் மலை போல் ஐஸ் கட்டியிருக்கா? கரண்ட் பில் எகிறாமல் தடுக்க.. இதோ சிம்பிள் டிப்ஸ்!

Related Articles

Related image1
Eye Care: அதிகரிக்கும் கண் வறட்சி நோய்.! காரணங்கள் மற்றும் தீர்வுகள் என்ன?
Related image2
Fridge: உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் மலை போல் ஐஸ் கட்டியிருக்கா? கரண்ட் பில் எகிறாமல் தடுக்க.. இதோ சிம்பிள் டிப்ஸ்!
35
பாம்பு இனப்பெருக்க முறைகள்
Image Credit : Canva

பாம்பு இனப்பெருக்க முறைகள்

இங்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பாம்பு முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்கப்படுகின்றன. இந்த கிராமத்தின் பொருளாதாரம் இந்த தொழிலைத்தான் நம்பியுள்ளது. காலப்போக்கில், இந்த மக்கள் பாரம்பரிய அறிவை நவீன தொழில்நுட்பங்களுடன் இணைத்துள்ளனர். முன்பு சிறிய அளவில் வளர்த்தவர்கள், இப்போது பெரிய பண்ணைகளை வணிக ரீதியாக நடத்துகின்றனர். இதற்காகவே பிரத்யேக பாம்பு இனப்பெருக்க மையங்களும் இங்குள்ளன.

45
வணிகப் பண்ணைகள்
Image Credit : Asianet News

வணிகப் பண்ணைகள்

ஆரோக்கியமான ஆண், பெண் பாம்புகளைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்கிறார்கள். காட்டுப் பாம்புகளை நம்புவதில்லை. பெண் பாம்புகள் இடும் முட்டைகளைப் பாதுகாப்பான வெப்பநிலையில் வைத்து குஞ்சு பொரிக்க வைக்கின்றனர். குட்டிகளைத் தனிப் பெட்டிகளில் வைத்துப் பராமரிக்கிறார்கள். ஆரம்பத்தில் எலி, தவளை கொடுத்தவர்கள், இப்போது கோழிக்கழுத்து போன்ற உணவுகளைக் கொடுக்கிறார்கள். 3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறைதான் பாம்புகளுக்கு உணவு.

55
லாபத்திற்குப் பின்னால் இருக்கும் பெரும் சவால்கள்
Image Credit : Canva

லாபத்திற்குப் பின்னால் இருக்கும் பெரும் சவால்கள்

பாம்பு வளர்ப்பு லாபகரமானது என்றாலும், இதில் ஆபத்துகளும் அதிகம். விஷப் பாம்புகளைக் கையாள்வது, உணவுச் செலவு அதிகரிப்பது போன்றவை சவால்கள். பாம்புகளுக்கு நோய் பரவினால், மொத்தப் பண்ணையும் பாதிக்கப்பட்டு பெரிய இழப்பு ஏற்படலாம். இது விவசாயிகளுக்கு ஒரு முக்கிய கவலையாக இருந்து வருகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
உலகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fridge: உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் மலை போல் ஐஸ் கட்டியிருக்கா? கரண்ட் பில் எகிறாமல் தடுக்க.. இதோ சிம்பிள் டிப்ஸ்!
Recommended image2
cm vijay: முதல்வர் விஜய்யின் ஸ்மார்ட் லுக்கிற்கு காரணமான 5 டிரெண்டிங் அணிகலன்கள்
Recommended image3
Diabetes Control: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இந்த ஒரு காய் போதும்.!
Related Stories
Recommended image1
Eye Care: அதிகரிக்கும் கண் வறட்சி நோய்.! காரணங்கள் மற்றும் தீர்வுகள் என்ன?
Recommended image2
Fridge: உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் மலை போல் ஐஸ் கட்டியிருக்கா? கரண்ட் பில் எகிறாமல் தடுக்க.. இதோ சிம்பிள் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved