Custard Apple: சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? மருத்துவ குணம் ஏராளம்

First Published | Aug 13, 2022, 11:13 AM IST

Seethapalam Custard Apple: மழைக்காலங்களில் உங்கள் டயட்டின் ஒரு பகுதியாக சீத்தாப்பழம் கட்டாயம் இருக்க வேண்டும். சீத்தாப்பழத்தில் உள்ள மருத்துவ பயன்கள் குறித்து வாருங்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

Custard Apple:

சீத்தாப்பழம் என்பது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு சத்தான பழமாகும். சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. சீத்தாப்பழம் பருவ காலத்து பழம் என்பதால் தற்போது சீசனில் உள்ளது. எனவே, மழைக்காலங்களில் உங்கள் டயட்டின் ஒரு பகுதியாக சீத்தாப்பழம் இருக்க வேண்டும். 

மேலும் படிக்க ....Breast Pain: மாதவிடாய் காலத்தில் மார்பகங்களில் உண்டாகும் வலி..? என்ன காரணம் தெரியுமா...?

Custard Apple:

சீத்தாப்பழத்தில் நீர்சத்து, மாவுசத்து, புரதம், கொழுப்பு அதிகமாக உள்ளது. மேலும், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்கள் கொண்டதாக கருதப்படுகிறது.


Custard Apple:

சீத்தாப்பழம்  ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்றழைக்கப்படுகிறது. 'கஸ்டர்ட்' என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.

சீத்தாப்பழம்  சாப்பிட்டால் உண்டாகும் மருத்துவ பயன்கள்:

சீதாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் ஆகியவற்றையும் குணப்படுத்தும். சீத்தாப்பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

மேலும் படிக்க.Guru Peyarchi 2022: குருவின் ராசி மாற்றம்...இன்னும் 104 நாட்களில் இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்...

Custard Apple:

1. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

2. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும். 

3. அதிக உடல் எடை கொண்டவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிடலாம்.

மேலும் படிக்க.Guru Peyarchi 2022: குருவின் ராசி மாற்றம்...இன்னும் 104 நாட்களில் இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டாகும்...

Custard Apple:

4. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டு வந்தால் புண்கள் ஆறும்.

5. சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

6. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும். பிசிஓடி பிரச்சனை உள்ள பெண்களும் சீத்தாப்பழத்தை சாப்பிடலாம். 

7. இரவில் சீத்தாப்பழத்தை சாப்பிடும் இதய நோயாளிகளுக்கு  இதயம் பலப்படும். மேலும், நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.இதற்குக் காரணம் இப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள்தான். 

Latest Videos

click me!