மாதவிடாய் உடலை மட்டுமல்லாமல், மன நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு படபடப்பு, கோபமான மனநிலை, எரிச்சல், பதட்டம் ஆகியவை ஏற்படும். சில பெண்களுக்கும் மார்பகங்களில் வலி, வீக்கம், கனத்த உணர்வு போன்றவை இருக்கும். இதற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
இவை புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள் காரணமாக நமக்கு ஏற்படுகிறது. இதை ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் (premenstrual syndrome) என்று அழைப்பார்கள்.
26
breast pain
வீக்கம், மென்மையாதல், வலி, எரிச்சல், போன்றவை மாதவிடாய் காலத்தில் பெண்கள் பலருக்கும் தோன்றும் அறிகுறிகள் ஆகும்.இந்த அறிகுறிகள் மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்கள் முன் ஆரம்பித்து, மாதவிடாய் காலத்தில் உச்சத்தை அடைந்து பிறகு தானாகவே சரியாகி விடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை. இந்த அறிகுறிகள் மாதவிடாய் வந்து இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும். அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது.
36
எவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது?
மார்பகங்களில் அல்லது அக்குள் பகுதியில் கட்டி வளர்ச்சி, வீக்கம், வலி போன்றவை இருந்தால் சாதாரணமாக கருத வேண்டாம்.