
தற்போது நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்து உட்கார்ந்து வேலை பார்ப்பதாலும், எந்தவித உடல் செயல்பாடு இல்லாததாலும் உடலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறோம். அதாவது உடல் பருமன், செரிமான பிரச்சனைகள், இதய நோய் போன்ற பிரச்சனைகள் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனைகள் வருவதை தவிர்க்க நமது ஆரோக்கியத்தை பராமரிப்பது ரொம்பவே முக்கியம். இதற்கு இஞ்சி உங்களுக்கு உதவும். இஞ்சியில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சரி இப்போது இஞ்சியை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இது குறித்து நிபுணர் ஒருவர் கூறுகையில், காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறிய துண்டு இஞ்சி சாப்பிட்டால் செரிமானத்தை அதிகரித்து உடலை வளர்ச்சிதை மாற்றத்திற்கு தயார்படுத்தும். இஞ்சி உமிழ்நீர் மற்றும் செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் இது அஜீரணம், குமட்டால், வயிற்று உப்புசத்தை குறைக்க பெரிதும் உதவும். அதுபோல இஞ்சியில் இருக்கும் சேர்மங்கள் வயிற்றுவலி, காலை நோய் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிரந்தர தீர்வு அளிக்கும். இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு, இதற்கு வைரஸ் எதிர்ப்பு ஆக்சிஜனேற்று பண்புகள் நிறைந்துள்ளதால் அவை சளி, இருமல், காய்ச்சல், தொண்டை தொற்று போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
இஞ்சி உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஒரு துண்டு இஞ்சி சாப்பிட்டால் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். மேலும் சர்க்கரை நோயாளிகள் மற்றும் PCOS பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ரொம்பவே நல்லது. இது தவிர இதய ஆரோக்கியத்திற்கும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் இஞ்சி உதவுகிறது.
காலையில் ஒரு துண்டு இஞ்சி சாப்பிட்டால் உடல் சோர்வை குறைத்து உடலுக்கு ஆற்றலை வழங்கும். இஞ்சியில் பசியை அடக்கும் பண்புகள் உள்ளதால் தேவையற்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க உதவும். எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நிபுணர்களின் கூற்றுப்படி ஒரு துண்டு இஞ்சியில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
குறிப்பு : நீங்கள் ஏதேனும் நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொண்டாலோ அல்லது உங்களுக்கு உடல்நிலை பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் முதலில் ஆலோசனை கேட்ட பிறகு தான் உங்களது உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டும்.