Monsoon Car Odor Removal Tips : மழை காலத்துல காரில் துர்நாற்றம்? வாசனையாக வைக்க சூப்பர் டிப்ஸ்

Published : Jul 08, 2025, 11:39 AM IST

மழை காலத்தில் ஈரப்பதம் காரணமாக காருக்குள் துர்நாற்றம் வீசுகிறதா? இதைப் போக்க சில வழிகள் இங்கே.

PREV
17
மழைக்காலத்தில் காருக்குள் துர்நாற்றம் வீசுகிறதா?

மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக வீட்டின் உள்ளே ஒரு விதமான ஈரப்பத வாசனை வர தொடங்கும். அது பொதுவானது தான். அதுபோல காரின் உட்புறமும் துர்நாற்றம் வீச தொடங்கும். மழைகாலத்தில் காரை சரியாக பராமரிக்கவில்லை என்றால் ஈரப்பதம் உள்ளே சென்று துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். பெரும்பாலான காரின் உட்புறம் துர்நாற்றம் வீசாமல் இருக்க ஏர் கண்டிஷனரை பயன்படுத்துவார்கள். ஆனால் இது ஒரு தீர்வு அல்ல. இது போன்ற பிரச்சினையும் நீங்களும் எதிர்கொண்டால் இயற்கையாகவே தீர்க்க சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

27
வெங்காயம் :

வெங்காயத்தை நறுக்கி ஒரு தட்டில் வைத்து அதை இரவு முழுவதும் காரில் அப்படியே வைத்துவிடுங்கள். வெங்காயத்தின் கடுமையான வாசனை காருக்குள் இருக்கும் துர்நாற்றத்தை உறிஞ்சி விடும். பிறகு காலையில் காரின் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து விடுங்கள். இதனால் காருக்குள் இருக்கும் வெங்காயத்தின் வாசனையும் போய்விடும்.

37
பிரியாணி இலை மற்றும் கிராம்பு :

ஒரு சிறிய துணி பையில் இரண்டு பிரியாணி இலலை மற்றும் நான்கு அல்லது ஐந்து கிராம்புகளை போட்டு காருக்குள் கண்ணாடியின் அருகே தொங்க விடவும். இது ஏற்கனவே நறுமணத்தை கொண்டது என்பதால் காரின் உள்ளே இருக்கும் மாற்றத்தை நீக்கிவிடும்.

47
பேக்கிங் சோடா மற்றும் வினிகர் :

உங்கள் காரில் உள்ளே அதிக துர்நாற்றம் வீசினால் ஒரு கிணத்தில் பேக்கிங் சோடா அல்லது வெள்ளை வினிகரை வைக்கவும் இவை இரண்டும் இயற்கையான வாசனை நீக்கிகள் என்பதால் காருக்குள் இருக்கும் துர்நாற்றத்தை உறிஞ்சி விடும்.

57
வேப்ப இலை:

ஒரு சிறிய துணி பையில் வேப்பிலைகளை நிரப்பி காரில் தொங்கவிடவும் அல்லது சீட்டுக்கு அடியில் வைக்க வேண்டும். வேப்ப இலைகள் ஈரப்பதத்தை உறிஞ்சுவது மட்டுமல்லாமல், பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுக்க உதவும்.

67
மர சாம்பல் :

ஒரு துணியில் மர சாம்பலை போட்டு அதை காரில் வைக்கவும். சாம்பல் ஈரப்பதம் மற்றும் ஈரப்பதத்தால் வரும் துர்நாற்றத்தை உறிஞ்சி விடும். இந்த தீர்வு பெரும்பாலும் மலைப்பகுதிகளில் முயற்சிக்கப்படுகிறது.

77
காரை சுத்தம் செய்!

காரை தினமும் சுத்தமாக வைக்க வேண்டும். ஈரமான துணிகள், குடைகள் அல்லது உணவுப் பொருட்களை காரில் வைக்க கூடாது. காருக்குள் புதிய காட்சி வர கார காரின் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைக்க வேண்டும். ஏசி வடிகட்டிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories