சிக்கன் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் ஒன்றாகும். அசைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடுவது கோழி தான். சிக்கன் பிரியர்கள் நாட்கள், வாருங்கள் என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் சிக்கன் வாங்கி சாப்பிடுவார்கள்.
26
கோழி இறைச்சி :
உண்மையில் சிக்கன் ஒரு நல்ல ஊட்டச்சத்து மூலமாகும். இதில் புரதங்கள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆட்டு இறைச்சியை விட கோழி இறைச்சி தான் ரொம்பவே மலிவானது என்பதால், அசைவ பிரியர்கள் இதை அடிக்கடி வாங்கி சாப்பிடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு கோழி இறைச்சி தான் சிறந்த தேர்வு.
36
கோழியின் தோல் :
பலர் சிக்கனை தோலுடன் சாப்பிடுகிறார்கள். இப்படி சாப்பிடுவது குறித்து மக்கள் மத்தியில் பலவிதமான கருத்துக்கள் எழுந்துள்ளன. அதாவது சிக்கனை தோலுடன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சிலர் நம்புகிறார்கள். இன்னும் சிலரோ அது தீங்கு விளைவுக்கும் என்றும் சொல்லுகிறார்கள். கோழியின் வெளிப்புற அடுக்கு தான் சிக்கன் தோல் என்று சொல்லப்படுகிறது. இது சாப்பிடுவதற்கு சுவையாகவும் சற்று மொறுமொறுப்பாகவும் இருப்பதால் தான் பலர் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். முக்கியமாக இதில் கொழுப்பு உள்ளன.
நிபுணர்களின் கூற்றுப் படி, சிக்கனை தோலுடன் சாப்பிடவே கூடாது. ஏனெனில் அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு தீங்கு தான் விளைவிக்கும். காரணம் கோழியின் தோலை புத்துணர்ச்சியாக வைக்க அதில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக நிபுணர்கள் சொல்லுகின்றன. எனவே சிக்கனை தோலுடன் சாப்பிடுவது நல்லதல்ல. குறிப்பாக இதய பிரச்சனை உள்ளவர்கள் மறந்தும் கூட சிக்கனை தோலுடன் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கோழியின் தோலில் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளதால் உயரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிக்கனை தோலுடன் சாப்பிடக்கூடாது. இருப்பினும் கோழியின் தோலில் ஒமேகா-3, 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் 15 நாட்களுக்கு ஒரு முறை சிக்கனை தோலுடன் சாப்பிடலாம். ஆனால் அடிக்கடி அல்ல.
56
பண்ணை கோழி :
பண்ணையில் வளர்க்கப்படும் கோழியையும் சாப்பிட கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்திகிறார்கள் ஒருவேளை அப்படி சாப்பிட விரும்பினால் தோல் நீக்கப்பட்ட கோழியை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
66
கோழியின் எந்த பகுதியை சாப்பிட வேண்டும்?
நீங்கள் சிக்கன் சாப்பிட விரும்பினால் கோழியின் மார்பக பகுதி சாப்பிடுங்கள். இந்த பகுதியில் புரதம் நிறைந்துள்ளதால் அவை உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். குறிப்பாக எடை இழப்பு மற்றும் தாசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். அதுபோல கோழியின் தொடை பகுதியையும் சாப்பிடலாம். இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளன. ஆனால் அவற்றை வறுக்காமல் குழம்பாக செய்து சாப்பிடலாம்.