Sweat Stains : வெறும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு!! சட்டை அக்குளில் வியர்வை கறை நீங்கும்!

Published : Jul 07, 2025, 12:56 PM IST

வியர்வையால் சட்டையின் அக்குள் பகுதியில் படிந்திருக்கும் மஞ்சள் நிற கறையை நீக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
மஞ்சள் நிற அக்குள் கறை நீக்குவது எப்படி?

கோடை வெப்பத்தின் காரணமாக வியர்ப்பது சகஜம். ஆனால் சிலருக்கு அதிகமாகவே வியர்க்கும். அதுவும் குறிப்பாக ஆண்களுக்கு. அதிகப்படியான வியர்வையால் அக்குள் பகுதியில் வியர்வை படிந்து அது மஞ்சள் நிறத்தில் கறை போல தெரியும். இந்த கறையை எவ்வளவு தான் ஊற வைத்து துவைத்தாலும் போகவே போகாது. இந்த பிடிவாதமான கறை படிந்த ஆடையை அணிவது ரொம்பவே சங்கடமாக இருக்கும்.

வெயில் காலத்தில் உடலிலிருந்து வியர்வை கண்டிப்பாக வெளியேறும். அதை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது. அதற்காக வியர்வை கறை படிந்த பிடித்த சட்டை அல்லது ஆடையை நாம் அணிந்து செல்லாமல் இருக்க முடியுமா? இத்தகைய சூழ்நிலையில் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு சட்டை அல்லது ஆடையின் அக்குளில் படிந்த வியர்வையால் ஏற்பட்ட மஞ்சள் நிற கறையை எளிதாக நீக்கிவிடலாம். அவை என்னென்ன? அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
வியர்வையால் சட்டை மஞ்சள் நிறமாக மாற காரணம் என்ன?

வியர்வையில் இருக்கும் உப்பு, யூரியா மற்றும் புரதம் சருமத்தில் உள்ள பாக்டீரியாவுடன் வேதியியல் ரீதியாக வினைபுரிந்து மஞ்சள் நிறத்தில் கறையை ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் டியோடரண்டல் உள்ள அலுமினியம் துணியில் பயன்படுத்தப்படும் சில ரசாயனங்கள் இந்த மஞ்சள் கறையை ஏற்படுத்தும்.

36
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு :

வியர்வையால் ஆடையில் ஏற்பட்ட மஞ்சள் கறையை போக்க ஒரு கப் சூடான நீரில், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு கலந்து அந்த கலவையை மஞ்சள் கறை படிந்த இடத்தில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு எப்போதும் போல துவைக்க வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் பிளீச்சிங் பண்பு கறையை நீக்க உதவுகிறது.

46
பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடா ஒரு இயற்கையான துப்புரவு பொருள் என்பதால், இது வியர்வையால் ஆடையில் ஏற்பட்ட மஞ்சள் கறையை நீக்க பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ஒரு வாளியில் சூடான நீர் ஊற்றி அதில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து அந்த கரைசலில் துணியை சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு எப்போதும் போல சோப்பு போட்டு துவைத்தால் கறை நீங்கிவிடும்.

56
வெள்ளை வினிகர் :

வெள்ளை வினிகரும் துணியில் உள்ள கறைகளை நீக்க உதவுகிறது. இதற்கு நீங்கள் துணி துவைக்கும் இயந்திரத்தில் கடைசியாக ஒரு கப் வெள்ளை வினிகரை சேர்க்க வேண்டும். ஒருவேளை கைகளால் துணிகளை எடுத்து வைத்தால் கடைசியாக துணி துவைக்கும் தண்ணீரில் அரை கப் வெள்ளை வினிகரை சேர்க்க வேண்டும். பிறகு துணியை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.

66
ஹைட்ரஜன் பெராக்ஸைடு :

இது ஒரு சக்தி வாய்ந்த ப்ளீச் ஆகும். இது எப்பேர்ப்பட்ட பிடிவாதமான கறையையும் சுலபமாக அகற்றி விடும். இப்போது வியர்வையால் ஆடையில் படிந்த மஞ்சள் கரையை நீக்க அரை கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைட் மற்றும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து அந்த கரைசலை கறை படிந்த சட்டையில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு எப்போதும் போல சோப்பு போட்டு துணியை துவைத்தால் கறை நீங்கும். இந்த முறையை காட்டன் துணியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories