வெங்காயத்தில் வைட்டமின் சி, துத்தநாகம் ,ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் வருவதை தடுக்கவும், சளி, இருமல் போன்ற பருவ கால தொற்றுகள் வருவதை தடுக்க உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும் :
வெங்காயத்தில் இருக்கும் இன்யூலின் போன்ற ப்ரீபயாடிக் நார்ச்சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவும். இதுகுறித்து, உணவு மற்றும் செயல்பாட்டின் இதழ்படி, வெங்காயம் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல், வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்கும்.