- நீங்கள் நடைபயிற்சிக்கு செய்வதற்கு புதியவராக இருந்தால் முதலில் உங்களுடைய மருத்துவர் அல்லது பயிற்சியாளரிடம் தகுந்த ஆலோசனை பெறுவது அவசியம்.
- ஒரே நாளில் இமயமலையை தொட முடியும் என்பது தன்னம்பிக்கையாக இருந்தாலும், நடைபயிற்சி பொருத்தவரை படிப்படியாக முன்னேறுவது தான் நல்லது. முதலில் 10 முதல் 15 நிமிடங்கள் நடக்கத் தொடங்கலாம். பின்னர் அதனை படிப்படியாக உயர்த்தலாம்.
- நடைபயிற்சி செய்வதற்கு பொருத்தமான காலணிகளை அணிவது அவசியம். அதில் கவனம் செலுத்த வேண்டும்.
- வியர்வை உறிஞ்சக்கூடிய காட்டன் துணிகளை அணிந்து நடைபயிற்சி செய்யுங்கள். நீரிழப்பை தடுக்க தண்ணீர் குடியுங்கள்.
- காலை அல்லது சூரியன் மறைந்த பின்னர் மாலை வெயில் இல்லாத நேரங்களில் நடைபயிற்சி செய்வது நல்லது.
- நடக்கும் போது தரையை பார்த்தபடி நடக்கக்கூடாது. நேராக பார்த்து கைகளை வீசி சரியான தோரணையில் நடைபயிற்சி செய்ய வேண்டும்.