தினமும் இரவில் 'இந்த' நேரத்தில்  சாப்பிடுங்க!! எடை தானாக குறையும்

Published : Mar 07, 2025, 07:59 PM ISTUpdated : Mar 07, 2025, 08:01 PM IST

நல்ல ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கு இரவு சாப்பிட சரியான நேரம் எது? என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

PREV
17
தினமும் இரவில் 'இந்த' நேரத்தில்  சாப்பிடுங்க!! எடை தானாக குறையும்
Eating Food

Best Dinner Time For Good Health : நம்முடைய தாத்தா பாட்டி 90 -100 வரை எந்த நோய்யும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர் ஆனால் இன்றைய காலகட்டத்தில் 20-30 வயதிலேயே சர்க்கரை நோய், மூட்டு வலி, கீழ்வாதம், சிறுநீரகப் பிரச்சனை, இதய நோய் போன்ற பல்வேறு நோய்களால் அவதிப்படுகிறோம். அப்படி நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? பெரிய ரகசியம் எதுவும் ஒன்றுமில்லை. அவர்கள் நிறைய உடல் உழைப்பை செய்தார்கள் மற்றும் ரசாயனம் இல்லாத உணவை சாப்பிட்டார்கள். முக்கியமாக சரியான நேரத்தில் சாப்பிட்டார்கள். இதுவே அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதன் ரகசியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

27
இரவு தாமதமாக சாப்பிட்டால் என்ன?

நூறு வயதிலும் நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் சரியான நேரத்தில் சாப்பிடுவது தான். ஆம், சரியான நேரத்தில் உணவை சாப்பிடாமல் இருந்தால் உடல் நலக்குறைபாட்டிற்கு வழிவகுக்கும். தற்போது இரவில் ஹோட்டல்களில் சாப்பிடும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக நேரம் காலம் என்று பாராமல் இரவில் கண்ட நேரத்தில் சாப்பிடுகிறார்கள். ஆனால் இரவில் சரியான நேரத்தில் உணவை சாப்பிடாவிட்டால் பல உடல் உள்ள பிரச்சனைகள் வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே ஆரோக்கியமாக இருக்க இரவில் எப்போது சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

37
இரவு சாப்பிட சிறந்த நேரம் எது?

நீங்கள் ஆயுள் முழுவதும் எந்தவித நோயுமின்றி ஆரோக்கியமாக வாழ விரும்பினால், இரவு தூங்கும் முன் சுமார் 2-3 மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவை சாப்பிட்டு விடுங்கள். கூற்றுப்படி மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு முடித்து இருக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறுகின்றனர்.

இதையும் படிங்க: தினமும் இரவில் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா ?

47
இரவில் பால் குடிக்கலாமா?

இரவில் பால் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இருப்பினும் நீங்கள் தூங்க செல்வதற்கு முன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பால் குடித்து முடித்து விடுங்கள். தூங்கு முன் ஒருபோதும் குடிக்க கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இதையும் படிங்க:  இரவு உணவுக்குப் பிறகு நடைபயிற்சி செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

57
இரவு கனமான உணவை சாப்பிடாதே!

சிலர் இரவு 10 மணி வரை அலுவலக வேலையை செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் வேலையின் நடுவில் பசி எடுக்கும். அத்தைகே சூழலில் கனமான உணவை ஒருபோதும் சாப்பிடவே கூடாது. இல்லையெனில் எடை அதிகரிப்பு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இரவில் வேலை செய்யும் போது பசி எடுத்தால் லேசான உணவை மட்டுமே உண்ணுங்கள். அதுவும் ஆரோக்கியமான.

67
எடையை குறைக்க எப்போது சாப்பிட வேண்டும்?

நீங்கள் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால் மாலை 7 மணிக்குள் இரவு சாப்பாடை முடித்து விடுங்கள். அப்போதுதான் உடலில் வளர்ச்சிதை மாற்றம் நன்றாக வேலை செய்யும். மேலும் உடலில் கொழுப்பும் சேராது முக்கியமாக இரவு உணவில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் இரவு சாப்பிடும் போது டிவி போன் போன்றவற்றை பார்க்க கூடாது. இல்லையெனில் நீங்கள் அதிகமாக சாப்பிட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக செரிமானம் சரியாக நடக்காது. எடையும் கூடும்.

77
நினைவில் கொள்

இரவில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் இரவு உங்களால் நிம்மதியாக தூங்க முடியும். இல்லையென்றால் உங்கள் தூக்கம் தான் பாதிக்கப்படும். மேலும் அஜீரண பிரச்சனையையும் ஏற்படுத்தும். முக்கியமாக சாப்பிட்ட உடனேயே ஒருபோதும் தூங்க கூடாது. அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

Read more Photos on
click me!

Recommended Stories