Published : Mar 07, 2025, 02:53 PM ISTUpdated : Mar 07, 2025, 02:57 PM IST
இதய நோயாளிகள் அதிகமாக தண்ணீர் குடித்தால், பல உடல் உள்ள பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வெயில் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைப் பற்றி இன்று காணலாம்.
Why Heart Patient Drink Less Water : உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக கோடை காலத்தில் தண்ணீர் குடிப்பது ரொம்பவே நல்லது என்று நிபுணர்கள் சொல்லுகின்றன. சோர்வை குறைக்கும் மனநிலையை மேம்படுத்தும் கொஞ்சம் பலன் நன்மைகளை நாம் பெறலாம். ஆதலால் ஒரு நாளைக்கு ஒரு நபர் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். 7 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடித்தால் மட்டும் போதும் என்று கருதுகின்றனர்.
25
தண்ணீர்
உடலில் தண்ணீர் இல்லை என்றால் நீரிழப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை என அனைவரும் தினமும் போதுமான அளவு தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். ஆனால், இதய நோயாளிகள் அதிகமாக தண்ணீர் குடிப்பது அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் அவர்கள் மிதமான அளவில் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? இதய நோயாளிகள் அதிகமாக தண்ணீர் குடித்தால் வரும் பிரச்சினைகள் என்ன? அவர்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
35
இதய நோயாளிகள் ஏன் அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாது?
இதய நோயாளிகள் தங்களது உடலில் சோடியம், பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்ற தாதுக்களை சமநிலையில் பராமரிப்பது ரொம்பவே முக்கியம். இட்டகேசநிலையில் அவர்கள் தண்ணீர் அதிகமாக குடித்தால் இந்த சமநிலையானது சீர்குலைந்து ஆபத்தை ஏற்படுத்தும்.
இதய நோயாளிகள் அதிகமாக தண்ணீர் குடித்தால் ஏற்படும் விளைவு
இதய நோயாளிகள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் இதய பம்பு சேதமடைந்து, இதயத்தில் அழுத்ததை அதிகரிக்கும். மேலும்
தமனிகள் பலவீனமடையும். இதன் விளைவாக இதயத்துடிப்பு ரொம்பவே அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு, நெஞ்சுவலி, பக்கவாதம் போன்ற அபாயம் அதிகரிக்கும். இது தவிர, சிறுநீரகங்கள் மீதும் அழுத்தம் அதிகரிக்கும்.
இதய நோயாளிகள் கோடையில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
இதய நோயாளிகள் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல என்பதால் கோடை காலத்தில் அவர்கள் தினமும் 8 கிளாஸ் அல்லது 2 லிட்டருக்கு மேல் தன் உயிர் குடிக்கவே வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் இதே நோயாளிகள் தண்ணீரைத் தவிர பிற பானங்களை குடிப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.