
யூரிக் அமிலம் என்பது பியூரின் என்னும் ஒரு சேர்மத்தின் முறிவின் மூலம் உடலில் உருவாகும் ஒருவிதமான ஆசிட் ஆகும். யூரிக் ஆசிட் உண்மையில் நம் உடலில் இருக்கும் ஒரு கழிவு பொருளாகும். இது சில உணவுகள் மற்றும் பானங்களை நான் சாப்பிடும் போது உடலில் உற்பத்தியாகிறது. இது பொதுவாக சிறுநீர் வழியாக உடலில் இருந்து வெளியேறும். ஆனால் உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக இருக்கும் போது மூட்டு வலி, கீல் வாதம் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே உடலில் யூரிக் ஆசிட் அளவை எப்போதும் சீரான முறையில் பராமரிக்க வேண்டும். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து காலை பழக்கவழக்கங்களை மட்டும் பின்பற்றினால் போதும். அவை என்னென்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
உடல் எப்போது நீரேற்றத்துடன் இருந்தால் யூரிக் ஆசிட் அளவை கட்டுக்குள் வைக்க முடியும். எனவே காலையில் எழுந்தவுடன் எப்போதும் ஒரு கப் சூடான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் தண்ணீர் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. சிறுநீரகம் வழியாக தான் யூரிக் அமிலம் வெளியேறுகிறது. எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைப்பது ரொம்பவே முக்கியம். நீங்கள் ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் குடித்தால் யூரிக் ஆசிட் சிறுநீர் வழியாக வெளியேற்றலாம். மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதையும் தடுக்கலாம்.
இதையும் படிங்க: யூரிக் அமிலத்தால் அவதிப்படுகிறீர்களா? இந்த கீரை மூட்டு வலியைக் குறைக்கும்!
எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் உள்ளதால் இது உடலில் இருக்கும் அமல தன்மையை நடுநிலை ஆக்க உதவுகிறது எனவே தினமும் காலை சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வேண்டுமானால் இதனுடன் சிறிதளவு கருப்பு உப்பு மற்றும் இஞ்சி சாறு சேர்க்கலாம். இந்த நீர் மூட்டுகளில் யூரிக் ஆசிட் உருவாவதை தடுக்கும். இது யூரிக் அமில அளவை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இதையும் படிங்க: படுத்தி எடுக்கும் யூரிக் அமிலம்: முள்ளங்கியை 'இப்படி' சாப்பிடுங்க.. ஈசியா குறைச்சிடலாம்!
பொதுவாக பலர் காலை எழுந்தவுடன் ஒரு கப்பி அல்லது காபியுடன் தங்களது நாளை தொடங்குவார்கள். ஆனால் உங்களுக்கு யூரிக் ஆசிட் பிரச்சனை இருந்தால் நீங்கள் காலையில் காபியை மிதமாக எடுத்துக் கொள்வது தான் நல்லது. காபியில் இருக்கும் காஃபின் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் ப்யூரிகளை உடைக்கும் நொதிகளுடன் போட்டியிடும். இதனால் உடலில் யூரிக் அமில உற்பத்தி குறையும். ஒருவேளை நீங்கள் காபியை அதிகமாக குடித்தால் அதில் இருக்கும் காஃபின் உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே நீங்கள் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப்புக்கு மேல் காபி குடிக்க வேண்டாம். பிளாக் காபி ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஆனால் சர்க்கரை ஏதும் சேர்க்காமல் குடித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
உங்களது காலை உணவில் நார்ச்சத்து அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதுதான் ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்கும். இதன் மூலம் உடலில் யூரிக் ஆசிட் உற்பத்தியாவதை குறைக்கலாம். அதுமட்டுமின்றி நார்ச்சத்து பசியை தூண்டாது. இதன் காரணமாக எடையையும் சுலபமாக குறைக்கலாம். எனவே ஓட்ஸ், சியா விதை, காய்கறிகள் மற்றும் பழங்கள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.
இயற்கை முறையில் யூரிக் ஆசிட் அளவை கட்டுப்படுத்த தினமும் காலை வெறும் காலில் புல்லில் நடக்கவும். இது அக்குபஞ்சர் போல் செயல்படுகிறது. இதனால் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும் மற்றும் யூரிக் ஆசிட் உடலில் இருந்து வெளியேற்றப்படும்.