உடற்பயிற்சி செய்த பின் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!! ஒரு பலனும் இல்லாம போய்டும்
உடற்பயிற்சி செய்த பிறகு சில உணவுகளை சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உடற்பயிற்சி செய்த பிறகு சில உணவுகளை சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Which Foods You Should Not Eat After Workout : நாம் ஆரோக்கியமாக இருந்தால் எந்த நோய் நொடியும் இல்லாமல் நன்றாக வாழ முடியும். எனவே, ஆரோக்கியமாக இருக்க பெரும்பாலான மக்கள் தினமும் உடற்பயிற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்வது உங்களை உடல் ரீதியாக மட்டுமல்ல, மனரீதியாகவும் வலிமையாக்கும். இருப்பினும் சிலர் உடற்பயிற்சி செய்த பிறகு சில தவறுகளை செய்கிறார்கள். இதனால் உடலில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இறுதியில் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை வந்துவிடும்.
அது என்ன தவறு என்றால், உடற்பயிற்சி செய்த பிறகு சில குறிப்பிட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று உடற்பயிற்சி அறிவுறுத்துகிறார்கள். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ நம்மில் பலர் உடற்பயிற்சிக்கு பிறகு சில உணவுகளை சாப்பிட்டு பிரச்சனையை விலைக்கு வாங்குகிறோம். சரி இப்போது உடற்பயிற்சி பிறகு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: தினமும் உடற்பயிற்சி செய்றீங்களா? கண்டிப்பா இந்த 5 உணவுகளை சாப்பிடனும்!
நீங்கள் எடையை குறைக்க ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், உடற்பயிற்சி செய்த பிறகு அசைவ உணவுகள் சாப்பிடுவது நல்லதல்ல. பொதுவாக அசைவ உணவு சாப்பிடுவது அதிக பலனை தரும் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், உடற்பயிற்சி செய்த உடனேயே அசைவ உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உடற்பயிற்சிக்கு பின் குளிர்ந்த நீரை குடிக்கலாமா?
அதுபோல உடற்பயிற்சி செய்து முடித்து வந்த உடனேயே குளிர்ந்த தண்ணீரை ஒருபோதும் குடிக்கவே கூடாது. மீறினால் இரைப்பை பிரச்சனை ஏற்படும் அபாயத்திற்கு வழிவகுக்கும். நீங்கள் உடற்பயிற்சி செய்துவிட்டு வந்த சிறிது இடைவெளிக்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் குறிப்பாக கொஞ்சமாக தான் குடிக்க வேண்டும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணியை குடிக்க வேண்டாம்.
நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகு பசி எடுத்தால் உடனே சிப்ஸ், ப்ரைட் ரைஸ் போன்ற வறுத்த உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். அதுபோல வேர்க்கடலையில் தயாரிக்கப்பட்ட எந்தவொரு உணவுகளையும் நீங்கள் சாப்பிடவே கூடாது. ஏனெனில் வேர்க்கடலையில் அதிக எண்ணெய் சத்து உள்ளதால் இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும்.
உடற்பயிற்சிக்கு பின் இனிப்புகள் சாப்பிடால் என்ன ஆகும்?
ஜிம்மிற்கு சென்று வந்த உடனேயே இனிப்புகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சர்க்கரை அதிக அளவு உள்ளதால் அது உங்களது சூடான உடல் பாகங்களில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதனால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
உடற்பயிற்சி செய்து பிறகு தாகம் எடுத்தால் ஒருபோதும் கூல் பானங்களை குடிக்க வேண்டாம். ஏனெனில் அவற்றில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகமாக இருக்கிறது. பதிலாக நீங்கள் இனிப்பு சேர்க்காத புதிய பழங்களின் சாறுகளை குடிக்கலாம்.
உடற்பயிற்சிக்கு பின் ஆம்லெட்
உடற்பயிற்சி செய்த பிறகு ஆம்லெட் சாப்பிட வேண்டாம். ஒருவேளை நீங்கள் முட்டை சாப்பிட விரும்பினால் பொரித்த முட்டைக்கு பதிலாக, ஆவியில் வேகவைத்த முட்டைகளை சாப்பிடுங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
உடற்பயிற்சி செய்த பின் உடனேயே துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் ஜிம்மிற்கு சென்று கடினமாக உழைத்ததற்கு எந்த பலனும் கிடைக்காமல் போகும். காரணம், துரித உணவுகளில் கொலஸ்ட்ரால் மற்றும் பிற கொழுப்பு பொருட்கள் உடலில் விரைவாக சென்றடையும் மேலும் அவை எளிதில் உருகாது. நீங்கள் கொழுப்பை எரிக்க விரும்பினால் உடற்பயிற்சி செய்த பிறகு துரித உணவுகள் சாப்பிட வேண்டாம்.
இதையும் படிங்க: உடற்பயிற்சி செய்றது முக்கியமல்ல.. மறக்காம இந்த '1' விஷயமும் பண்ணனும் தெரியுமா?