உடற்பயிற்சி செய்றது முக்கியமல்ல.. மறக்காம இந்த '1' விஷயமும் பண்ணனும் தெரியுமா?
Drinking Water While Exercising : உடற்பயிற்சி செய்யும் போது இடையில் தண்ணீர் அருந்துவது சரியான அணுகுமுறையா? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Drinking Water While Exercising In Tamil
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அன்றாடம் உடற்பயிற்சி செய்வது உதவியாக இருக்கும். தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் மனநலமும் நன்றாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடல் எடையை குறைக்க மட்டுமின்றி சுறுசுறுப்பாக இருக்கவும் உடற்பயிற்சி செய்வார்கள்.
Exercise Tips In Tamil
உடற்பயிற்சியினால் நல்ல பலன்களை பெற அதை செய்யும் முன்னதாக சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யக்கூடாது. ஆனால் சிலர் தண்ணீர் குடிப்பதையும் தவிர்ப்பார்கள். உடற்பயிற்சி செய்யும்போது தண்ணீர் குடிக்கலாமா? அதனால் ஏதாவது பிரச்சனைகள் வருமா? என்பது குறித்து இங்கு காணலாம்.
இதையும் படிங்க: இந்த '4' உடற்பயிற்சிகள் போதும்; இனி மன அழுத்தம் இருக்காது! ட்ரை பண்ணி பாருங்க..
Hydration during exercise in tamil
தண்ணீர் குடிக்கலாமா?
உடற்பயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிப்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. உடற்பயிற்சி செய்யும் சமயங்களில் சிறிதளவு தண்ணீர் குடிப்பதால் உடலின் வெப்பநிலை சீராக உதவுகிறது. பொதுவாக தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் போது நம்முடைய உடல் வெப்பநிலை அதிகமாகும். இந்த நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் அந்த வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நீரிழப்பு தடுப்பு:
உடற்பயிற்சிக்கு நடுவே தண்ணீர் அருந்துவதால் இதயத்துடிப்பு சீராகும். இது சுறுசுறுப்பாக உடற்பயிற்சி செய்ய உதவியாக இருக்கும். உடற்பயிற்சி செய்யும்போது அதிக வியர்வை வெளியேறும். இந்த நேரத்தில் கொஞ்சம் தண்ணீர் அருந்துவதால் உடல் நீரேற்றமாக இருக்கும். நீரிழப்பு காரணமாக ஏற்படும் தலைவலி, வாந்தி, வயிறு வலி, தலைசுற்றல் போன்ற பாதிப்புகளை தவிர்க்கலாம்.
Benefits of drinking water during exercise in tamil
பசி எடுக்காது:
உடற்பயிற்சி செய்யும்போது அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால், அதன் பின்னர் பசியும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அதிக அளவில் சாப்பிடும் வாய்ப்புள்ளது. ஆனால் உடற்பயிற்சிக்கு நடுவிலும், அதன் பின்னரும் தண்ணீர் அருந்துவதால் நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தடுக்க முடியும். இதனால் எடை மேலாண்மையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சரும பராமரிப்பு:
உடற்பயிற்சி செய்யும் தருணங்களில் அவ்வப்போது தண்ணீர் அருந்துவதால் சருமம் பளபளப்பாகும் என சொல்லப்படுகிறது. உடலில் இருக்கும் நச்சுக்கள் வியர்வை வழியாக வெளியேறி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
How to hydrate effectively during exercise in tamil
கவனிக்க...
உடற்பயிற்சி செய்யும்போது அதிகமான தண்ணீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் அருந்தலாம். இது உங்களுடைய ஆற்றலை அதிகரிக்க உதவும். உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர் நிறைய தண்ணீர் அருந்தலாம். வெறும் தண்ணீரை அருந்துவதற்கு பதிலாக சர்க்கரை சேர்க்காத ஏதேனும் பழச்சாறும் அருந்தலாம்.
இதையும் படிங்க: நீண்டநேர உடற்பயிற்சியால் மரணம்? உண்மை என்ன? எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தால் நல்லது?