MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நீண்டநேர உடற்பயிற்சியால் மரணம்? உண்மை என்ன? எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தால் நல்லது? 

நீண்டநேர உடற்பயிற்சியால் மரணம்? உண்மை என்ன? எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தால் நல்லது? 

Daily Exercise Time Limit : அண்மையில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தவர் உயிரிழந்தார் என்ற செய்தி பரவி வரும் நிலையில், உடற்பயிற்சி மரணத்தை உண்டு பண்ணுமா? எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

3 Min read
Kalai Selvi
Published : Nov 22 2024, 08:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Daily Exercise Time Limit In Tamil

Daily Exercise Time Limit In Tamil

அண்மை காலங்களில் மக்கள் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனிடையில் உடற்பயிற்சியில் ஈடுபவோரின் மரணங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. கடந்தாண்டிலும் இது மாதிரியான துர்சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கு அல்ல. உடற்பயிற்சியின் மீதுள்ள அதிக மோகத்தால் அதிக நேரம் உடற்பயிற்சி செய்வோரின் மரணங்கள் அதிகமாகி வருகின்றன. இந்த  கொடூரம் ஆண்களில் தான் அதிகம் நடக்கிறது. 

27
Daily Exercise Time Limit In Tamil

Daily Exercise Time Limit In Tamil

உடற்பயிற்சியினால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்களில் தான் அதிகமுள்ளது. சமீபத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாதீர் முகமது தனது சொந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளார்.  ஜிம்மில் மற்றவர்கள் உடற்பயிற்சியை முடித்துவிட்டு கிளம்பிய பின்னரும் முகமது உடற்பயிற்சியை தொடர்ந்துள்ளார். பின்னர் குளிக்கச் சென்றவர் திரும்ப வரவில்லை. வெகுநேரமாகியும் முகமது வராத காரணத்தால் அவரது ஓட்டுநர் உள்ளே சென்று பார்த்துள்ளார். கீழே விழுந்து கிடந்தவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

37
Daily Exercise Time Limit In Tamil

Daily Exercise Time Limit In Tamil

இந்த மரணம் அதிக உடற்பயிற்சியால் நிகழ்ந்தது என ஒருபுறம் சொல்லப்பட, மற்றொரு புறம் உடற்பயிற்சி மரணத்தை ஏற்படுத்தாது எனவும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விளக்கங்களை பாடி பில்டர்ஸ் வெளியிட்டு வருகின்றனர். உண்மை என்ன என்பதை இங்கு காணலாம். வீட்டில் உடற்பயிற்சி செய்தாலும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்தாலும் முதலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள், உங்களுடைய ஆரோக்கியம் தான். உங்கள் உடலுக்கேத்த மாதிரி உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். ஏற்கனவே உங்களுக்கு ரத்த அழுத்தம், இதய கோளாறுகள் உள்ளிட்டவை இருந்தால் அதற்கேற்ற உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். 

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கு 'எந்த வயதில்' உடற்பயிற்சி சொல்லி கொடுக்கனும் தெரியுமா? ஸ்ட்ராங்கான குழந்தைக்கு சூப்பர் டிப்ஸ்!!

47
Daily Exercise Time Limit In Tamil

Daily Exercise Time Limit In Tamil

ஜிம் போக தொடங்கியதும் முறையான வழிகாட்டுதல் இன்றி உடற்பயிற்சி மேற்கொள்வது தவறான அணுகுமுறை. உடலின் தன்மைக்கு ஏற உடற்பயிற்சியை செய்யாமல் கடுமையான உடற்பயிற்களை செய்யக் கூடாது. ஜிம்மிற்கு என குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி தொடர்ந்து ஜிம் சென்று பழக வேண்டும். மனதிற்கு தோன்றும் சமயம் மட்டும் செல்லும் பழக்கம் ரொம்ப தவறு. இந்த தவறுகள் தான் இதய கோளாறுகளை தீவிரப்படுத்தி மாரடைப்பை உண்டாக்குகிறது. 

முக்கியமான விஷயம் உடற்பயிற்சி செய்பவர்கள் நன்கு தூங்க வேண்டும். முறையான தூக்கம் இல்லாதவர்கள் கடுமையான பயிற்சிகளை செய்வதே மாரடைப்புக்கு காரணமாக அமைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

57
Daily Exercise Time Limit In Tamil

Daily Exercise Time Limit In Tamil

உடற்பயிற்சியி செய்யும் போது உங்களுடைய சுவாசம், இதயத்துடிப்பு எல்லாமே மாறுபடுகிறது. இதனால்  ரத்த அழுத்தம் அதிகமாக மாறுவது வழக்கம். இந்த நிலை உடற்பயிற்சி முடிந்த பின்னர் கூல் டவுன் பயிற்சிகளை செய்யும்போது குறைந்துவிடும். ஆனால்  குறையாமல் இருந்தால் உடலில் பிரச்னையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இப்படி இருக்கும்போது மருத்துவ உதவியை நாட வேண்டும். உங்கள் உடலுக்கான எல்லையை தாண்டி பயிற்சி மேற்கொள்வதும் ஆபத்து. ஸ்டீராய்டு எடுத்து கொள்பவர்கள் மருத்துவ வழிகாட்டுதலை பெற வேண்டும். அடிக்கடி ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.  உடற்பயிற்சிகள் உடலை வலிமையாக்குமே தவிர உடலை மோசமான நிலைக்கு தள்ளாது. 

இதையும் படிங்க:  உட்கார்ந்த இடத்திலே தொப்பையை குறைக்க ஆசையா? இந்த '3' விஷயத்தில் கவனம்!!  

67
Daily Exercise Time Limit In Tamil

Daily Exercise Time Limit In Tamil

ஒரு நாளில் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்?  

நீங்கள் செய்யும் பயிற்சிகளை பொறுத்து நேரமும் மாறுபடும். நீங்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டால் 40 நிமிடங்கள் நடக்கலாம். ஓட்டப்பயிற்சி மேற்கொண்டால் 30 நிமிடங்கள் ஓடுவது நல்லது. தினமும் ஓடாமல் வாரத்தில் மூன்று நாட்கள் ஓட்ட பயிற்சி மேற்கொள்ளலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று ஓட்டப்பயிற்சியும், இடைப்பட்ட நாட்களில் கால்களுக்கு வலிமையூட்டும் ஸ்ட்ரென்த் பயிற்சிகளையும் (Strength traning), மற்ற கார்டியோ பயிற்சிகளையும் செய்வது உடலுக்கு நல்லது.

 

77
Daily Exercise Time Limit In Tamil

Daily Exercise Time Limit In Tamil

ஜிம்மில் அல்லது வீட்டில் மிதமான உடற்பயிற்சி செய்தால் 40 நிமிடங்கள் செய்யலாம். உடலில் உறுதியுள்ளவர்கள், வெகுகாலம் உடற்பயிற்சி செய்பவர்கள் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்யலாம். சுயமாக செய்வதை விட வழிகாட்டுதலுடன் செய்வது நல்லது. முக்கியமாக மூர்க்கமாக அதாவது கடும் உடற்பயிற்சிகளை செய்த பின் உடனடியாக வெந்நீரில்  குளிக்க வேண்டாம். சரியான உணவு பழக்கம், நல்ல தூக்கம்  இருந்தால் தான் உடற்பயிற்சி நல்ல பலன்களை தரும். மனதை இலகுவாக வைத்து கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved