Brain Aneurysm : சல்மான் கானுக்கு 'மூளை அனீரிஸம்' பாதிப்பு - இந்த நோய் யாருக்கு வரும்? அறிகுறிகள், சிகிச்சை என்ன?

Published : Jun 27, 2025, 01:40 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மூளை அனீரிஸம் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். மூளை அனீரிஸம் என்றால் என்ன? இதன் பாதிப்புகள், அறிகுறிகள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

PREV
16
What is Brain Aneurysm?

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சல்மான் கான். இவர் ‘சிக்கந்தர்’ என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவர் புரமோஷன் பணிகளிலும், டிவி தொலைக்காட்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மாவின் ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ நிகழ்ச்சியில் பங்கெடுத்திருந்தார். அப்போது கபில் சல்மான் கானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளை எழுப்பியிருந்தார். அப்போது சல்மான் கான் தனக்கு இருக்கும் உடல்நலப் பிரச்சனைகள் குறித்தும், மூளை அனீரிஸம் எனப்படும் நோய் பாதிப்பு குறித்தும் பேசியிருந்தார். சல்மான்கான் இவ்வாறு பேசியதற்கு பின்னர் மூளை அனீரிஸம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர்.

26
மூளை அனீரிஸம் என்றால் என்ன?

ரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் அனீரிஸம் எனப்படுகிறது. ரத்த நாளங்கள் பலவீனமடையும் பொழுது குறிப்பாக அது இரண்டாகப் பிரியும் இடத்தில் ஏற்படும் வீக்கமே அனீரிஸம் எனப்படுகிறது. குறிப்பாக பலவீன பகுதி வழியாக ரத்தம் பாயும் பொழுது அந்த அழுத்தம் அந்தப் பகுதியை வெளிப்புறம் நோக்கி பலூன் போல வீங்கச் செய்கிறது. இந்த வீக்கம் உடலில் ஓடும் எந்த ரத்த நாளங்களிலும் ஏற்படலாம். ஆனால் அவை பெரும்பாலும் இரண்டு இடங்களில் மட்டுமே ஏற்படுகின்றன. ஒன்று மூளை, மற்றொன்று இதயத்தில் இருந்து உடலுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனி ஆகிய இடங்களில் இந்த அனீரிஸம் ஏற்படுகிறது. மூளையில் ஏற்பட்டால் அது மூளை அனீரிஸம் எனப்படுகிறது.

36
மூளை அனீரிஸத்தால் வரும் பாதிப்புகள்

மூளை அனீரிஸம் வெடிக்கும் வரை எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அனீரிஸம் சிறிதாக உள்ளபோது அல்லது வெடிக்காமல் இருக்கும் பொழுது அது எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. ஆனால் அது வெடித்தால் மிகவும் அபாயகரமான நிலை ஏற்படும். மூளையில் இரத்தம் கசிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். மூளை அனீரிஸம் வெடித்த பின் தாங்க முடியாத தலைவலி, பின் கழுத்து விறைத்தல், குமட்டல், வாந்தி, வெளிச்சத்தை பார்க்கும் போது வலி ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம். வீக்கம் பெரிதாக பெரிதாக அருகிலுள்ள நரம்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி அதீத தலைவலி, மங்கலான பார்வை, பார்வையில் மாற்றம், முகம் மரத்துப் போதல் உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும்.

46
மூளை அனீரிஸம் யாருக்கு ஏற்படும்?

ரத்த நாளங்கள் ஏன் பலவீனமடைகின்றன என்றும், இந்த வீக்கங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதையும் ஆய்வாளர்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் உயர் ரத்த அழுத்தம், குடும்பத்தில் யாருக்கேனும் ஏற்கனவே மூளை அனீரிஸம் பாதிப்பு இருப்பது, சில நேரங்களில் ரத்த நாளங்கள் பிறப்பு முதல் பலவீனமாக இருப்பது, தலையில் ஏற்படும் காயம், மது மற்றும் போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துவது, புகைப்பிடிப்பது உள்ளிட்டவை பொதுவான காரணங்களாக கூறப்படுகின்றன. இந்த அனீரிஸம் எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இது அதிகமாக காணப்படுகிறது. ஆண்களைவிட இது பெண்களில் அதிகம் காணப்படுகிறது. பிரிட்டன் சுகாதார அறிக்கையின்படி ஒவ்வொரு வருடமும் இங்கிலாந்தில் 15,000 பேரில் ஒருவருக்கு மூளை அனீரிஸம் வெடிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

56
மூளை அனீரிஸத்துக்கு சிகிச்சை முறைகள் என்ன?

அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 8 முதல் 10 பேருக்கு அனீரிஸம் வெடிப்பு ஏற்படுவதாக பிரைன் அனீரிஸம் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது. மூளை அனீரிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. எண்டோவாஸ்குலார் சிகிச்சை மற்றும் சர்ஜிக்கல் கிளிப்பிங் ஆகியவை இதற்கான சிகிச்சை முறைகள் ஆகும். வெடிக்காத அனீரிஸத்திற்கு இந்த சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம். ஆனால் சிகிச்சையால் கிடைக்கும் பலன்களை விட இதன் அபாயமே அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சர்ஜிகல் கிளிப்பிங் முறையில் அனீரிஸம் மூடப்படுகிறது. வீக்கமான ரத்த நாளம் கண்டுபிடிக்கப்பட்டு ரத்த ஓட்டம் அனிரீசத்திற்குள் செல்லாத வகையில் ஒரு சிறிய உலோகம் கிளிப்போல பொருத்தப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் அனீரிஸம் உருவாவதில்லை.

66
மூளை அனீரிஸம் வராமல் தடுக்கும் முறைகள் என்ன?

எண்டோவாஸ்குலார் சிகிச்சை சர்ஜிக்கல் கிளிப்பிங்கை விட எளிமையான சிகிச்சை ஆகும். ஒரு மெல்லிய குழாய் ரத்த நாளங்கள் வழியாக வீக்கத்திற்குள் செலுத்தப்பட்டு சிறப்பு உலோக காயல்கள் உள்ளே வைக்கப்படுகின்றன. இதில் உள்ள குறைபாடு என்னவென்றால் மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதற்கான அபாயம் உள்ளது. இதனால் அனீரிஸம் மீண்டும் தோன்றலாம். எனவே இமேஜ் டெஸ்டிங் எனப்படும் உள்ளுறுப்புகளை அடிக்கடி படம் பிடித்து பார்க்க வேண்டியது கட்டாயம் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஃபாலோ டைவர்ஸன் எனப்படும் ஸ்டண்ட் பொருத்தும் முறையும் நடைமுறையில் உள்ளது. மூளை அனீரிஸம் உருவாகாமல் தடுப்பதற்கு புகைப்படுத்தலை நிறுத்துதல், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்தல், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், உடன் பருமனை கட்டுப்படுத்துதல் ஆகியவையே தீர்வாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories