Scorpion Venom : மார்பகப் புற்றுநோய்க்கு தேள் விஷம் மூலம் மருந்து? ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம்

Published : Jun 27, 2025, 12:40 PM IST

புற்றுநோய் சிகிச்சைக்காக தேள் விஷத்தை பயன்படுத்தும் ஆய்வுகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் நடந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

PREV
15
Scorpion Venom Used To Treat Breast Cancer

விஷமுள்ள உயிரினங்கள் பட்டியல் தயார் செய்தால் அதில் தேளுக்கு தவிர்க்க முடியாத இடம் உண்டு. ஆனால் இந்த தேளின் விஷத்தில் பல மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகம் ஒன்றில் தினமும் சுமார் 2 கிராம் அளவிற்கு தேன் நஞ்சு எடுக்கப்படுகிறது. சிறு துளி நஞ்சை தேள் வெளியிடும் வரை காத்திருந்து பின்னர் அது உறைய வைக்கப்பட்டு பொடியாக்கிய விற்பனை செய்யப்படுகிறது. மத்திய மற்றும் தென் அமெரிக்கா பகுதிகளில் தேள்களின் கொடுக்ககளில் இருந்து எடுக்கப்படும் மார்க்டாக்ஸின் என்கிற பொருள் மூலம் ரத்த நாளங்களில் புதிய செல்கள் உருவாக்குவதுடன், இதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளின் போது உதவுவதாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

25
பிரேசில் விஞ்ஞானிகள் ஆய்வு

மருத்துவத்துறையில் தேளின் விஷம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது பிரேசில் விஞ்ஞானிகள் மார்பகப் புற்று நோய்க்கு தேளின் விஷத்தை பயன்படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரேசில் விஞ்ஞானிகள் அமேசான் பகுதியில் காணப்படும் Brotheas amazonicus என்கிற தேளின் விஷத்திலிருந்து, BamazScplp1 என்கிற மூலக்கூறு ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த மூலக்கூறு மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய திறன் கொண்டிருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த மருந்து பொதுவாக புற்று நோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பேக்லிடாக்செல் என்கிற மருந்து போன்று செயல்படுவதாகவும், புற்றுநோய் செல்களை மேக்ரோசிஸ் எனும் கட்டுப்படுத்தப்படாத செல் இறப்பு மூலம் அழிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

35
ஆரம்பகட்ட பரிசோதனைகள்

தேளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மூலக்கூறு புற்றுநோய் செல்களை மட்டுமே அழிப்பதாகவும், அதே வேளையில் சாதாரண செல்களை அதிக அளவில் பாதிக்கவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் ஆய்வக சோதனைகள் மற்றும் ஆரம்பகட்ட விலங்கு மாதிரிகள் அடிப்படையிலானவை மட்டுமே. இது மனிதர்களுக்கு மருந்தாக பயன்படுத்துவதற்கு முன்பு பலகட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் இயற்கையான மூலக்கூறுகளில் இருந்து புற்றுநோய்க்கான மாற்று மருந்துகளையும் மற்றும் குறைவான பக்க விளைவுகளையும் கொண்ட புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கும் நம்பிக்கையை அளிக்கிறது.

45
பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய்

உலக சுகாதார அமைப்பின்படி மார்பகப் புற்றுநோய் பெண்களில் மிகவும் பொதுவான புற்றுநோய் வகையாகும். மேலும் உலக அளவில் இரண்டாவது பொதுவான புற்றுநோயாகவும் விளங்கி வருகிறது. நேச்சர் மெடிசன் இதழில் வெளியிட்டப்பட்ட ஆய்வின்படி உலக அளவில் சராசரியாக 20 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய விகிதங்கள் தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டுக்குள் 3.2 மில்லியன் மார்பகப்புற்று நோயாளிகளும், 1.1 மில்லியன் மார்பகப் புற்றுநோய் இறப்புகளும் ஏற்படும் என கூறப்படுகிறது. பெரும்பாலும் மார்பகப் புற்றுநோய் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடம் ஏற்படுகின்றன.

55
மேற்படி ஆராய்ச்சிகள் தேவை

தேளின் விஷம் புற்று நோய்க்கு முழுமையான சிகிச்சை அளிக்கும் என்று தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதவை. தேள் விஷத்தை நேரடியாகவோ அல்லது முறையற்ற வழிகளோ பயன்படுத்த முயற்சிப்பது உயிருக்கே ஆபத்தாகலாம். தேளின் விஷத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் சில மூலக்கூறுகள் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கு ஒரு சாத்தியபூர்வமான அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால் இது இன்னும் முதற்கட்ட ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. மார்பக புற்றுநோய்க்கு மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகளான கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, அறுவை சிகிச்சை மட்டுமே சரியானவை. எந்த ஒரு சிகிச்சை முறையும் முயற்சிக்கும் முன்பும் தகுந்த மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனைப் பெறுவது கட்டாயம்.

Read more Photos on
click me!

Recommended Stories