Walking Rule : தினமும் வாக்கிங் போறீங்களா? இந்த 6-6-6 வாக்கிங் விதியை ஃபாலோ பண்ணா ரொம்ப நல்லது தெரியுமா?

Published : Nov 12, 2025, 10:42 AM IST

நடைபயிற்சி செல்பவர்கள் 6-6-6 வாக்கிங் விதியை பின்பற்றுவது கூடுதல் நன்மைகளைப் பெற்றுத் தரும்.

PREV
15

ஆதிகால மனிதன் அதிக நேரம் அமர்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றவில்லை. குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நகரும் பழக்கத்தை கொண்டிருந்தான். அதனால் தான் இந்த காலத்தில் அமர்ந்த வாழ்க்கை முறையில் நமக்கு பல பிரச்சனைகள் வருகின்றன. நம்முடைய வாழ்க்கை முறையில் ஏதேனும் ஒரு உடற்பயிற்சி முறையை தொடர்ந்து செய்வது நல்லது. அது கார்டியோ பயிற்சி, நடைபயிற்சி, வலிமை பயிற்சிகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வாரத்தில் குறைந்தது 4 முதல் 5 நாட்கள் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

25

6-6-6 நடைபயிற்சி விதி

நடைபயிற்சி செய்பவர்கள் 6-6-6 நடைபயிற்சி விதியை பின்பற்றினால் சிறந்த நன்மைகள் கிடைக்கும். முதலில் ஆறு நிமிட வார்ம்-அப், பின்னர் 60 நிமிட விறுவிறுப்பான நடை, அதன் பின் ஆறு நிமிட கூல்-டவுன் பயிற்சிகள் செய்தால் போதும். சிலர் இதையே வாரத்தில் 6 நாட்கள், காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்கு செய்கிறார்கள்.

35

டெகாத்லான் உடற்பயிற்சி நிபுணர்கள், ஒரு மணிக்கு 5 மைல் வேகத்தில் ஒரு மணி நேரம் வேகமாக நடந்தால் 610 கலோரிகள் செலவாகும் என கூறுகிறார்கள். ரன்னிங் அல்லது ஹிட் பயிற்சிகளில் ஏற்படும் மூட்டு அழுத்தம் இதில் இருக்காது. எடை இழப்புக்கு உதவும். நடைபயிற்சி வயதாகும் நிகழ்வை தாமதமாக்குகிறது. உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகிய நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் கூட குறைக்கிறது.

45

வாக்கிங் செல்வதால் தசைக்கூட்டு கோளாறுகளில் வலி நிவாரணம் கிடைக்கிறது. நல்ல தூக்கம், மன ஆரோக்கியம் மேம்பட உதவும். எந்த உடற்செயல்பாடும் இல்லாத வயதானவர்களை விட ஒரு வாரத்தில் 2.5 மணிநேரம் வேகமாக நடைபயிற்சி செய்வதர்களுக்கு மனச்சோர்வின் அபாயம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

55

பரவலாகி வரும் 6-6-6 வாக்கிங் விதி ஜப்பானிய உடற்பயிற்சி கலாச்சாரத்துடன் தொடர்புடையது. இது ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பழக்கத்தை கொண்டு வருகிறது. காலை 6 மணிக்கு நடக்காவிட்டால் மாலை 6 மணிக்கு நடக்கலாம். வாரத்தில் 6 நாட்கள் நடக்காவிட்டாலும், முடியும்போதெல்லாம் நடக்கலாம். முடிந்த போதெல்லாம் நடக்கலாம். வெறும் ஆறு நிமிடத்தில் உங்கள் மனநிலையை மாற்றும் அபார சக்தி நடைபயிற்சிக்கு உண்டு. அது ஒரு தியானம் போன்றது என ஜப்பானிய வலைப்பதிவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories