நாக்கு சுத்தமும் முக்கியம்; ஒரு மாசம் சுத்தம் பண்ணலன்னா ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

Published : Apr 25, 2025, 11:42 AM ISTUpdated : Apr 25, 2025, 11:48 AM IST

உங்களது நாக்கை ஒரு மாதத்திற்கு சுத்தம் செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
14
நாக்கு சுத்தமும் முக்கியம்; ஒரு மாசம் சுத்தம் பண்ணலன்னா ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

What Happens if You Neglect Tongue Cleaning for a Month : நம்முடைய உடல் உறுப்புகளில் ரொம்பவே முக்கியமானது நாக்கு தான். நாக்கை தினமும் சுத்தம் செய்வது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வாய் சுகாதாரம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல விஷயங்கள் நாக்கில் தான் தங்கியிருக்கின்றன. தினமும் காலை எழுந்தவுடன் பல் துலக்கும் போது நாக்கையும் கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் காலையில் பல் துலக்குவார்களே தவிர நாக்கை சுத்தப்படுத்தவே மாட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஒரு மாதம் முழுவதும் நீங்கள் உங்களது நாக்கை சுத்தம் செய்ய விட்டால் என்ன ஆகும் தெரியுமா? இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

 

24
நாக்கை ஒரு மாசம் சுத்தம் செய்யாவிட்டால் என்ன ஆகும்?

பெரும்பாலானோர் நாக்கை சுத்தம் செய்வதை புறக்கணிக்கிறார்கள். ஆனால் இந்த பழக்கம் உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், நீங்கள் உங்களது நாக்கை தினமும் சுத்தம் செய்து வந்தால் அதன் மேற்பரப்பில் இயற்கையாகவே சேரும் பாக்டீரியாக்கள், சாப்பிட்ட உணவின் குப்பைகள், இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன. 

 

34
நாக்கை சுத்தம் செய்

ஒருவேளை நாக்கை ஒரு மாதம் காலமானாலும் சுத்தம் செய்யாமல் அப்படியே வைத்துவிட்டால் அதன் மேற்பரப்பில் பாக்டீரியாக்கள் வளரும். இதுதவிர, தடிமனான மற்றும் ஒட்டும் பயோஃபிலிமை உருவாகும். இதன் விளைவாக வாய் துர்நாற்றம் அடிக்கும், சுவை உணர்வு மந்தமாகும், வாயில் அசெளகரியமாக உணர்தல், வெள்ளை திட்டுக்களை பூஞ்சை தொற்று உருவாகும், மற்றும் இறந்த செல்கள் விளைவால் நாக்கு கருமையாக மற்றும் தெளிவற்றதாக மாறிவிடும். இவை மோசமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. மேலும் நாக்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் ஈறுகளுக்கு பரவி ஈறு தொற்று நோயை ஏற்படுத்தும். சில சமயங்களில் மோசமான செரிமான பிரச்சனைகளுக்கு கூட வழிவகுக்கும். நீங்கள் தொடர்ந்து நாக்கை சுத்தம் செய்யாமல் இருந்தால் ஈறு நோய்கள், தொற்றுகள், வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு காலப்போக்கில் அவை உங்களது குடல் மற்றும் ரத்த ஓட்டத்திற்கு சென்றடைந்து உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கச் செய்யும்.

44
நாக்கை சுத்தம் செய்வதற்கான காரணங்கள்:

- தினமும் நான் கை சுத்தம் செய்து வந்தால் வாய் துர்நாற்றம் அடிக்காது.

- உங்களது சுவை உணர்வு மேம்படுத்தப்படும்.

- வாயில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் குறைக்கப்படும்.

- ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிக்கும்.

- நாக்கை சுத்தமாக வைத்துக் கொண்டால் வாய் புத்துணர்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் வாய்க்கொளர்கள் வருவது குறையும்.

குறிப்பு : நாக்கை சுத்தம் செய்வது என்பது உங்களது சுவாசத்தை பற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories