ஒரே வாரத்தில் '1' இஞ்ச் தொப்பையைக் குறைக்கும் 3 பயிற்சிகள்!! 

Published : Apr 25, 2025, 08:13 AM ISTUpdated : Apr 25, 2025, 08:20 AM IST

தொப்பையில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய 3 உடற்பயிற்சிகளை இங்கு காணலாம். 

PREV
16
ஒரே வாரத்தில் '1' இஞ்ச் தொப்பையைக் குறைக்கும் 3 பயிற்சிகள்!! 

How to Lose Belly Fat with 3 Effective Exercises : உடலில் எந்த ஒரு பாகத்திலும் எடையை தனியாக குறைக்க முடியாது. அதாவது ஒட்டுமொத்த உடல் எடையும் குறையும் போது தான் நம்முடைய உடலில் தேவையில்லாத கொழுப்புகள்  படிப்படியாக குறையும்.  உதாரணமாக உடற்பயிற்சிகளில் தொப்பையை மட்டும் இலக்காகக் கொண்டு  குறைப்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் சரியான உணவு பழக்கம் வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி என முறையாக பின்பற்றினால் உடல் எடையுடன் தொப்பையையும் குறைக்கலாம். இந்த பதிவில் தொப்பையை எளிய பயிற்சிகளில் எப்படி குறைக்கலாம் என்பதை காணலாம். 

26
தொப்பை கொழுப்பைக் குறைக்க

ஒரே வாரத்தில் தொப்பையை முழுமையாக குறைத்து ஒல்லியான தோற்றத்தை அடைவது கடினமான காரியம். ஆனால் நீங்கள் ஒரு வாரம் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது அதற்கேற்ற பலன்களை நிச்சயம் உடல் அமைப்பில் காண்பீர்கள். வயிற்றைச் சுற்றி டயர் போல காணப்படும் கொழுப்பைக் குறைக்க ஆரோக்கியமான உணவு பழக்கம், உடற்பயிற்சி, நல்ல தூக்கம் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களை நீண்டகாலம் பின்பற்ற வேண்டும். நடைபயிற்சி, படிக்கட்டுகளில் ஏறுதல் ஆகியவை தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் மற்ற பயிற்சிகளாகும். 

36
தொப்பை கொழுப்பைக் குறைக்க உடற்பயிற்சி

இந்த பயிற்சியை இரண்டு விதமாக செய்யலாம். நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் இதனுடைய அட்வான்ஸ் வெர்ஷனை குதித்தபடி செய்யலாம். உடற்பயிற்சிக்கு புதியவர் என்றால் நின்ற இடத்தில் இருந்தே செய்யலாம். முதலில் இடது காலை பக்கவாட்டிற்கு கொண்டு சென்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். அதே நேரத்தில் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி தொடவேண்டும். ஒவ்வொரு முறை காலை பக்கவாட்டில் வைக்கும்போதும் ஒரு கைகளை மேலே தூக்க வேண்டும். இதை வேகமாக செய்ய வேண்டும். இதை ஒரு செட்டுக்கு 30 வீதம் 3 செட்டுகள் செய்யலாம். 

 

46
கால்களை மேலே தூக்கும் பயிற்சி

தொப்பை கொழுப்பைக் குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று ஹை நீஸ் என்ற கால்களை மேலே தூக்கும் பயிற்சிதான்.  இதையும் குதித்தப்படி செய்யலாம் அல்லது நின்ற இடத்திலேயே கால்களை மட்டும் நன்கு உயர தூக்க வேண்டும். ஒவ்வொரு காலையும் 15 முறை என ஒரு செட்டில் 30 தடவை இருகால்களையும் தூக்கலாம். மூன்று செட்டுகள் செய்யலாம். 

 

56
ஸ்குவாட்

தொப்பையை குறைக்க இந்த ஒரு பயிற்சியே போதுமானது. ஒரு நாளைக்கு 100 பர்பீஸ் போதுமான ஓய்வுடன் செய்தாலே சூப்பர் பலன்கள் கிடைக்கும். உடலில் உள்ள கலோரிகளை விரைவாக எரிக்கலாம். அமெரிக்க விளையாட்டு மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சி தகவல்களின்படி, நீங்கள் 10 பர்பீகளை செய்வது 30 வினாடிகள் முழு வேகத்தில் ஓடுவதற்கு சமமானது. இந்த பயிற்சிக்கு முதலில் பிளாங்க் பொசிஷனில் நிற்க வேண்டும். இதனுடன் ஸ்குவாட், புஷ் அப் போன்றவையும் உண்டு. தொப்பை கொழுப்பைக் குறைக்கும் சிறந்த பயிற்சி. 

66
தொப்பையை குறைக்க உணவுகள்,

- நார்ச்சத்து, புரதம் அதிகம் இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். கார்போஹைட்ரேட்டை குறைக்க வேண்டும். புரத  உணவுகள் எடை இழப்பு, தசை வளர்ச்சியை ஊக்குவிக்கும். 

- தொப்பையை குறைக்க விரும்பினால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், பொறித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நன்றாக தண்ணீர் குடியுங்கள். உடலை நீரேற்றமாக வைத்துக்  கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories