கடலை மாவில் செய்யும் உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவரா நீங்க? அதிர்ச்சி தகவல் இதோ!

Published : Apr 24, 2025, 05:41 PM ISTUpdated : May 04, 2025, 08:03 PM IST

கடலைமாவை உணவில் அடிக்கடி சேர்ப்பது நல்லதா.. கெட்டதா? என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

PREV
17
கடலை மாவில் செய்யும் உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவரா நீங்க? அதிர்ச்சி தகவல் இதோ!

Benefits of Gram Flour for Health : கடலை மாவு ஒவ்வொரு இந்திய வீட்டு கிச்சனில் கண்டிப்பாக இருக்கும் ஒரு சமையல் பொருள். பழங்காலத்திலிருந்து கடலை மாவு சரும பராமரிப்பு வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடலை மாவு சருமத்திற்கு பயன்படுத்தினால் அழகை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பச்சையான கொண்டைக்கடலையை கொண்டு தயாரிக்கப்படுவது தான் கடலை மாவு. இது பலவகையான பலகாரங்கள் தயாரிக்க பயன்படுகிறது. பொதுவாக கடலை மாவு தயாரிக்கப்படும் பொருட்கள் பெரும்பாலும் எண்ணெயில் பொறிக்கப்படுவதால் இதை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா.. கெட்டதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

27
கடலை மாவு ஆரோக்கிய நன்மைகள்

ஆனால், உண்மையில் கடலை மாவு ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. எனவே, கடலை மாவை எந்த சந்தேகமுமின்றி தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சரி இப்போது கடலை மாவை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

37
கடலை மாவு சத்துக்கள்

கடலை மாவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது தவிர இதில் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் காப்பர் செலினியம், ஜிங்க், மாங்கநனீசு, வைட்டமின் கே போன்ற பல சத்துக்கள் உள்ளன.

 

47
ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது

கடலை மாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் ரொம்பவே குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது. கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவு பொருட்கள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாது. எனவே சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி கடலை மாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கடலை மாவில் நீங்கள் சப்பாத்தி அல்லது பரோட்டா கூட செய்து சாப்பிடலாம்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது:

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கடலைமாவில் உள்ளன. மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம் உயர்த்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் இதய செயலிழந்து, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

57
எடையை குறைக்க உதவும்

ஆய்வு ஒன்றில், கடலை மாவு எடையை குறைக்க உதவுவதாக கண்டறிந்துள்ளன. காரணம் அதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைக்கும். அதுமட்டுமின்றி கடலை மாவு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடையை குறைக்க ஊக்குவிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கடலைமாவை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

குடல் புற்று நோயை எதிர்த்து போராடும் :

மெக்சிகன் ஆய்வு ஒன்றின் படி, கடலை மாவு குடல் புற்று நோயை எதிர்த்து போராடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. கடலை மாவு புற்றுநோய் உண்டாக்கும் பீட்டா-கேட்டனின் செயல்பாட்டை தடுக்கும். ஆகவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டும் ஆகவே, உங்களுக்கு குடல் புற்றுநோய் வராமல் இருக்க கடலை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

67
எலும்புகள் வலிமையாகும்

கடலை மாவில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுப்படுத்துவதற்கு உதவும். எனவே உங்களது எலும்புகளை வலிமையாக்க வேண்டுமானால், கடலைமாவை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் எலும்புகள் வலிமையாவதோடு மட்டுமல்லாமல், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் வராது.

மலச்சிக்கலை நீக்கும்:

மலச்சிக்கலால் அவஸ்தப்படுகிறீர்கள் என்றால் கடலை மாவை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். கடலைமாவில் இருக்கும் நார்ச்சத்து மலம் இருக்கமாவதைத் தடுத்து மென்மையாகி, எளிதாக வெளியேற்றும். இதனால் குடல் இயக்க செயல்பாடும் சிறப்பாக இருக்கும்.

77
இரும்பு சத்து குறைபாடு

கடலை மாவில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. எனவே இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் தங்களது டயட்டில் கடல் மாவை சேர்த்துக் கொண்டால் இரும்புச்சத்து குறைபாடு நீங்கும் மற்றும் ரத்த சோகை சரியாகும்.

குறிப்பு : கடலை மாவு ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories