How Morning Walk Helps to Improve Skin Health : காலையில் நடைபயிற்சி செல்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் என்பது நாம் அறிந்ததே. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நடைபயிற்சி சிறந்ததாக இருக்கும். அதிலும் காலை இளம்வெயிலில் நடப்பது வைட்டமின் டி சத்து கிடைப்பதற்கு ஏதுவான நேரமாகும். கோடைகாலத்தில் அதிக நீரிழப்பை தடுக்க அதிகாலை வாக்கிங் செல்வது நல்லது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் வாக்கிங் செல்வதால் சரும ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா இந்த பதிவில் நடைபயிற்சிக்கும் சரும ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பை காணலாம்.
25
Benefits of Morning Walk for Skin Health
சரும ஆரோக்கியம்:
காலை நடைப்பயிற்சியில் குறிப்பிடத்தகுந்த நன்மைகள் சருமத்தில் உணரப்படுகின்றன. தினமும் நடைபயிற்சி செல்வது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கும். உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்தம் சீராக செல்வதால் சருமத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. காலை நடைப்பயிற்சியில் எவ்வளவு வியர்வை வெளியேறுகிறதோ, அதன் மூலம் நச்சுகள் வெளியேறிவிடும். நச்சுக்கள் வெளியேறுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
35
Benefits of Morning Walk for Skin Health
தரமான தூக்கம்:
காலையில் எழுந்ததும் சிறிது நேரம் வாக்கிங் செல்வதால் மனம் அமைதியாகும். நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பகலில் சுறுசுறுப்பாக இயங்குவதால் இரவில் உடலுக்கு ஓய்வு தேவைப்படும். இரவில் சீக்கிரம் தூங்கம் வந்துவிடும். தரமான தூக்கம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கியமான காரணியாகும்.
உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் தாங்குவதால் சரும ஆரோக்கியம் பாதிக்கப்படும். உங்களுடைய செரிமான மண்டலம் நன்றாக செயல்பட்டு கழிவுகளை சரியாக வெளியேற்ற நடைபயிற்சி உதவும். வாக்கிங் உடலின் மைய, வயிற்று தசைகளை நன்கு செயல்படுத்துவதால் குடல் இயக்கம் மேம்படும். இதனால் செரிமானம் மேம்படுகிறது.
நீங்கள் மன அழுத்தத்தோடு காணப்படும் போது சருமம் டல்லாக தெரியும். சோர்வாக காணப்படுவீர்கள். தினமும் நடைபயிற்சி செய்வது உங்களுடைய மனநிலையை மேம்படுத்துகிறது. இதனால் இரவில் நல்ல தூக்கம், மகிழ்ச்சியான மனநிலை என காணப்படுவீர்கள். உங்களுடைய சருமம் பளபளப்பாக தெரியும்.