பூண்டுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடுங்க; நம்ப முடியாத பலன்கள்!!

Published : Apr 25, 2025, 09:27 AM ISTUpdated : Apr 25, 2025, 09:37 AM IST

பூண்டுடன் எந்த உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
14
பூண்டுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடுங்க; நம்ப முடியாத பலன்கள்!!

Foods That Pair Well With Garlic and Their Benefits : பூண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். ஆயுர்வேதத்தில், பூண்டு ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. பூண்டில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் பி1, கால்சியம், செலினியம், தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பாய்க்கும். இது செரிமான பிரச்சனை, மூட்டு வலி, வீக்கம் போன்ற பல பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

24
பூண்டுடன் சில உணவுப் பொருட்கள்

இத்தகைய சூழ்நிலையில் பூண்டுடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் அதன் மருத்துவ குணங்கள் இரண்டு மடங்கு அதிகரிக்கும். அது என்னென்ன பொருட்கள் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 

34
பூண்டு நன்மைகள்

1. பூண்டுடன் சிறிதளவு ஓமம் சேர்த்து நசுக்கி கஷாயமாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வாந்தி, கொட்டாவி குறையும்.

2. பூண்டுடன் குப்பைமேனியை சேர்த்து அரைத்து அதன் சாற்றை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.

3. பூண்டை பச்சையாக சாப்பிட்டால் அஜீரணம், வயிற்று வலி நீங்கும் மற்றும் ரத்த அழுத்தம் குறையும். உடல் பலம் பெற்று உற்சாகம் அடைவீர்கள்.

4. பூண்டின் சாற்றை உள்நாக்கில் தடவி வந்தால் உள்நாக்கு வளர்ச்சி குறையும்.  

5. பூண்டுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் கீழ்வாதம் குணமாகும்.

 

44
வெள்ளைப் பூண்டு நன்மைகள்

6. பூண்டுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டால் திடீரென்று வரும் வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் சரியாகும்.

7. பாலில் பூண்டை சேர்த்து நன்கு காய்ச்சி குடித்து வந்தால் மாரடைப்பு, ரத்த அழுத்தம் வரவே வராது.

8. பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.

9. பூண்டு மற்றும் இஞ்சியிலிருந்து சம அளவு சாறு எடுத்து அதை தினமும் காலை மாலை என இரண்டு வேலையும் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் நெஞ்சு குத்து சரியாகும்.

10. பூண்டிலிருந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அதை சுளுக்கு பிடித்த இடத்தில் தடவினால் விரைவில் சுளுக்கு சரியாகிவிடும்.

11. பூண்டு மற்றும் வெற்றிலையை நன்கு அரைத்து அதை தேமல் மீது தொடர்ந்து தடவி வந்தால் விரைவில் தேமல் மறையும்.

Read more Photos on
click me!

Recommended Stories