Walking Tips : எடை குறைய வாக்கிங் போறீங்களா? மறந்தும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. ஒரு கிராம் குறையாது

Published : Dec 01, 2025, 11:28 AM IST

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் வாக்கிங் செல்லும்போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

PREV
14
Walking Tips

நடைபயிற்சி என்பது உடற்பயிற்சியிலேயே மிகவும் எளிதான பயிற்சியாகும். நடைபயிற்சி எல்லா வயதினரும் செய்யக்கூடியது. உணவுக்கு முன், உணவுக்கு பின் என எந்த நேரத்திலும் இதை செய்யலாம். நாள்பட்ட நோய்களை கொல்லுவதற்கு எளிதான தீர்வை இது வழங்குகிறது. ஆனால் நடைப்பயிற்சி செய்யும் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அப்போது தான் அதன் முழு பலனை பெற முடியும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

24
வாக்கிங் செல்லும்போது செய்ய வேண்டியவைகள் :

- வாக்கிங் செல்லும்போது முதுகெலும்பு நேராக, உடல் செங்குத்தான நிலையில் தான் இருக்க வேண்டும். முதுகெலும்பு ஒருபோதும் வளைத்து நடக்கக் கூடாது.

- அதுபோல கால்கள் மற்றும் கைகளை விறுவிறுப்பாக வீசி நடக்கவும்.

- குதிங்காலை நன்கு ஊன்றி நடக்க வேண்டும். அப்போதுதான் விரைவில் சோர்வடைய மாட்டீர்கள்.

- நடைபயிற்சியில் மேல் நோக்கி ஏறுவது அதாவது படிக்கட்டுகளில் ஏறி நடப்பது தசைகள் தொடை எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும்.

- மலைபாகங்களான இடங்களில் நடைபயிற்சி செய்தால் இதயத்துடிப்பு ஆரோக்கியமாக இருக்கும். அதுபோல சரியான முறையில் வாக்கிங் சென்றாலும் இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

- தினமும் நடைபயிற்சி செய்யும் போது கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்டுங்கள். ஏனெனில் மெதுவாக வாக்கிங் செல்வது பெரிதும் பலன் தராது.

- நடைப்பயிற்சிக்கு முன் பின் பயிற்சிகள் செய்வது நல்லது.

- வாக்கிங் சென்ற பிறகும் உடலை சில நிமிடங்கள் நீட்ட வேண்டும். இதனால் நீண்ட காலத்திற்கு வாக்கிங் தொடர்பான காயங்கள், வலிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

- வாக்கிங் செல்லும்போது கண்டிப்பாக தளர்வான ஆடைகளை அணியவும். அதுவும் வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகளை அணிவது ரொம்பவே நல்லது.

34
வாக்கிங் செல்லும்போது செய்யக்கூடாதவைகள் :

- நடைபயிற்சி செய்யும் போது வேறு எதையும் உடலில் சுமந்து செல்லக்கூடாது. இதனால் நடக்கும் தோரணை பாதிக்கப்படும் மற்றும் உடலும் கஷ்டமாகும்.

- வாக்கிங் போகும்போது முறையற்ற காலணிகளை ஒருபோதும் அணியாதீர்கள். நடக்கும்போது அசெளகரியமாக உணர்வீர்கள். நடைபயிற்சிக்கு இலகுவான காலணிகளை அணியவும்.

- லெதரில் காலணிகளை அணிய வேண்டாம். அதுபோல இறுக்கமான ஆடைகளையும் அணிவதே தவிர்க்கவும்.

44
நடைப்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?

நடப்பயிற்சியின் முழு பலனை பெற அதிகாலை வாக்கிங் செல்வது நல்லது. இது இயற்கையான மற்றும் சுத்தமான காற்றில் உங்களை புதுப்பிக்கும். நடைப்பயிற்சியை உற்சாகமாக்கும். எனவே, காலையில் வாக்கிங் செல்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். ஒருவேளை வெளியில் சென்று நடக்க முடியாவிட்டால் வீட்டிற்குள் அல்லது மொட்டை மாடியில் கூட நடக்கலாம். அதுபோல பெண்கள் கண்டிப்பாக வாக்கிங் செல்ல வேண்டும் இது உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். நடைப்பயிற்சி தான் மிக எளிதான உடற்பயிற்சி. இது உங்களை நீண்ட நாள் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைக்க உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories