Acne Scars Face Packs : முகப்பரு தழும்புகள் நீங்கி 'கண்ணாடி' மாதிரி பொலிவான முகத்திற்கு பெஸ்ட் ஃபேஸ் பேக் இதுதான்...

Published : Nov 29, 2025, 05:15 PM IST

முகத்தில் அசிங்கமாக இருக்கும் முகப்பரு தழும்புகளை நிரந்தரமாக போக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
Acne Scars Face Packs

முகத்தில் அதிகமாக பருக்கள் வந்தால் தழும்புகளும் வரும். முகப்பரு தழும்புகள் முகத்தின் அழகை கெடுக்கும். இதைப் போக்குவதற்கு பலர் விலையுயர்ந்த கிரீம்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் அவை எந்தவித பலரும் அளிக்காது. இப்படிப்பட்ட சமயத்தில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ் பேக்காக போட்டால் முகத்தில் அசிங்கமாக இருக்கும் முகப்பு தழும்புகளை நிரந்தரமாக போக்கிவிடலாம். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

26
காற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு ஃபேஸ் பேக் :

இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு 2-3முறை இந்த ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகத்தில் இருக்கும் தழும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும்.

36
தயிர் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக் :

இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவுடன், 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் தடவி சுமார் 20-30 அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, முகப்பரு தழும்பை நிரந்தரமாக மறைக்க உதவும்.

46
தேன் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் :

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தேனில் சிறிதளவு மஞ்சள் கலந்து அதை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் பேக் பருக்கள் வருவதை தடுக்கும் மற்றும் பருக்களால் முகத்தில் ஏற்பட்ட தழும்புகளையும் மறைக்க உதவும்.

56
தயிர் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக் :

2 ஸ்பூன் தயிருடன், 2 ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் கலந்து முகத்தில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு சூடான நீரில் முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அடியோடு நீக்கி முகப்பரு தழும்புகளையும் மறையக்க உதவும்.

66
தேன் மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக் :

இதற்கு ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த பப்பாளியை மசித்து கொள்ளுங்கள். அதனுடன் 2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதை முகத்தில் தடவி சுமார் 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும் பிறகு சூடான நீரில் முகத்தை கழுவவும் இந்த ஃபேஸ் பேக் சருமத்தை புத்துணர்ச்சியாகும், நீரேற்றமாக வைக்கும் மற்றும் முகத்தில் இருக்கும் தழும்புகளை நிரந்தரமாக நீக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories