Spinach and Blood Sugar : வெறும் கீரைக்கு இவ்வளவு பவரா? சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும் அற்புதக் கீரை!!

Published : Oct 08, 2025, 01:20 PM IST

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கீரை உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மைதான். அந்த கீரையைக் குறித்து காண்போம்.

PREV
17

இன்றைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. அதிகநேரம் அமர்ந்த வாழ்க்கைமுறை, மோசமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை இதற்கு குறிப்பிடத்தகுந்த காரணமாகும். சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். மருந்துகளையும் முறையாக எடுக்க வேண்டும்.

27

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கக் கூடிய உணவுகளை தொடர்ந்து உண்ண வேண்டும். இதனால் சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் மற்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். இந்தப் பதிவில் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் கீரையைக் குறித்து காண்போம்.

37

நீரிழிவு நோயாளிகள் ஊட்டச்சத்தான உணவுகளை உண்ண வேண்டும். குறைந்த கார்போஹைட்ரேட், அதிகளவில் புரதம், நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். வீட்டிலே வளரக் கூடிய ஒரு கீரை வகையை நாள்தோறும் உண்ணும்போது சர்க்கரை நோயை கட்டுக்குள் வருகிறது.

47

சர்க்கரை நோய் கட்டுப்பாடு

வெந்தயக் கீரையை நாள்தோறும் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க காலையில் வெந்தய கீரையை சூப் செய்து குடிக்கலாம். இதனுடன் மற்றொரு பானமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பானம் மட்டுமின்றி கீரை சூப்பும் குடித்தால் நல்ல மாற்றம் இருக்கும்.

57

அது என்ன பானம்?

துண்டுகளாக வெட்டிய ஒரு வெண்டைக்காய், சில துண்டுகள் பாகற்காயை இரவில் தண்ணீரில் போட வேண்டும். மறுநாள் காலை இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையும் செய்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என நம்பப்படுகிறது.

67

கீரை சூப் செய்வது எப்படி?

கைப்பிடியளவு வெந்தயக் கீரையை சுத்தப்படுத்தி நறுக்கி கொள்ளுங்கள். இந்த கீரையுடன் பொடியாக வெட்டிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் போன்றவை சேர்த்து சூப் பதத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சூப்பை குடித்த 10 நிமிடங்களுக்கு பின் மற்ற உணவுகளை சாப்பிடலாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் வாக்கிங், யோகா ஆகியவற்றில் ஏதேனும் கட்டாயம் செய்ய வேண்டும்.

77

முக்கிய டிப்ஸ்!

ஒவ்வொரு வேளை உணவுக்கு பின்னும் 10 முதல் 15 நிமிடங்கள் குறுநடை போடுவதும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. காலை, மாலை என நடைபயிற்சி செய்தாலும் உணவுக்கு பின் நடப்பதுதான் உண்மையில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories