ஆபத்தான புற்றுநோய்களில் நுரையீரல் புற்றுநோயும் அடங்கும். இது ஆரம்பத்தில் சாதரண அறிகுறிகளை தான் வெளிப்படுத்தும். சுவாசக்குழாய் அழற்சி அல்லது ஆஸ்துமா ஆகியவற்றுடன் பொருந்தும் பொதுவான அறிகுறிகளை வெளிக்காட்டுவதால் தாமதமாகவே கண்டறியப்படுகிறது. இங்கு அலட்சியமாக விடக் கூடிய 5 அறிகுறிகளை காணலாம்.
26
இருமல்
உங்களுக்கு 3 வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இருமல் இருந்தால் அது நுரையீரல் புற்றுநோய்க்கான ஒரு அறிகுறிதான். சாதாரண சளி அல்லது ஒவ்வாமைக்கு சிகிச்சை எடுத்த பின்னும் நிவாரணம் இல்லாமல் இருமல் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுங்கள். இதை மக்கள் சளி அல்லது சுவாசக்குழாய் அழற்சி என நினைத்து அலட்சியம் செய்கின்றனர். புற்றுநோய் கட்டி நுரையீரலில் உள்ள சுவாசப்பாதையில் எரிச்சலை உருவாக்குவதால்தான் இருமல் வருகிறது. மோசமான இருமல் இருக்கும் நபர்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
36
எடை குறைதல்
திடீரென எடை குறைதல் மற்றும் தொடர்ச்சியான சோர்வு ஆகியவை கூட நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்தான். இந்த எடை குறைதலுக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பில்லை. மன அழுத்தமும் காரணமாக இருக்கலாம். புற்றுநோய்க்கு எதிராக போராட உடலுக்கு அதிக ஆற்றல் தேவை. ஆகவே கடுமையாக எடை குறையும். அன்றாட வேலைகளை செய்யக் கூட சிரமப்படுவார்கள்.
சாதரண செயல்களை செய்யும்போதும் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் வந்தால் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து சோர்வு, பலவீனம், சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் புற்றுநோய் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் இருப்பதன் அறிகுறிகளாகும்.
56
தோள்பட்டை வலி
தொடர்ச்சியான தோள்பட்டை வலி கூட நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையதுதான். மோசமான நிலையில் தூங்கியதால் இந்த வலி வருவதாக மக்கள் நினைக்கிறார்கள். நுரையீரல் புற்றுநோய் கட்டிகள் வந்தால் அது மார்பு மற்றும் தோள்பட்டையில் தொடர்ந்து வலியையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். சிரிக்கும்போதும், இருமும்போதும் கூட வலிக்கும்.
66
கரகரப்பான குரல்
உங்களுக்கு தொண்டை தொற்று அல்லது சளி போன்றவை இல்லாமல் கரகரப்பான குரல் இருந்தால், அது நுரையீரல் புற்றுநோயாக இருக்கலாம். நுரையீரலில் புற்றுநோய் வந்தால் குரல் நாண் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தலாம். இது நரம்பு பாதைகளை சேதப்படுத்திவிடும். இதனால் நிரந்தர குரல் மாற்றங்கள் வரலாம்.