தற்போது உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புகைப்பிடித்தல், உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, அதிகமாக மது அருந்துதல், மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இது தவிர மரபியல், வயது மூப்பு மற்றும் சில மருந்துகளில் விளைவுகளாலும் இது ஏற்படும். இதை சரியாக கவனிக்காவிட்டால் மாரடைப்பு பக்கவாதம் சிறுநீரக நோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்தால் போதும். அதை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம். அவை என்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.