Tea : மழைக்காலத்தில் இந்த 'டீ' குடித்தால்.. நோய்களே வராது..! அற்புதமான அந்த 'டீ' எதுனு தெரியுமா?

Published : Oct 06, 2025, 09:07 AM IST

சுவையை அனுபவிப்பதுடன் உடலுக்கு அத்தியாவசிய தாதுக்களைப் பெற இந்த டீ சிறந்த தேர்வாக இருக்கும்.

PREV
16

பலருக்கும் டீ ஓர் உற்சாக பானம். ஆனால் டீக்குள் மருத்துவ குணங்களும் உண்டு. மழைநேரத்தில் இந்த டீயை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது உள்பட பல நன்மைகளை தருகிறது. வெல்லத்தை சிறிது சேர்த்து போடும் இந்த டீயில் அவ்வளவு நன்மைகள்.

26

ஊட்டச்சத்துகள்

வெல்லம் சாதாரண இனிப்புப் பொருள் கிடையாது. இதில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் ஆகிய தாதுக்கள் உள்ளன. காலை டீயுடன் சில அத்தியாவசிய தாதுக்களை பெற வெல்லம் போட்ட டீ குடிக்கலாம்.

36

வெல்லம், இஞ்சி ஆகியவை கலவை டீயை கூடுதல் பலன்களை வழங்குகிறது. வெல்லம் போட்டு டீ குடித்தால் சளி, காய்ச்சல் அபாயம் குறைகிறது. மழைநேரத்தில் வெல்லம் போட்டு டீ குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சில நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மழைநேரத்தில் ஏற்படும் சளி, இருமல் தொந்தரவு ஆகியவை நீங்கும்.

46

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் அதை வெண்மையாக்க சல்பர் பயன்படுத்தப்படுகிறது. அதை தவிர்த்து வெல்லம் சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்தும். வெல்லம் உண்பது செரிமான நொதிகளைத் தூண்டிவிடும். இந்த டீயை குடிப்பதால் உடலில் சுத்திகரிப்பான் போல செயல்பட்டு நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான மண்டலத்திற்கு நல்லது.

56

தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை வெல்லம் போட்ட டீ குடிக்கலாம். மழைநேரத்தில் ஜலதோஷம் வந்தால் உடலை சூடாக வைத்திருக்க வெல்லம் போட்ட டீ அருந்தலாம். குளிருக்கு இதமாக இருக்கும். வயிற்றுப் பிரச்சினைகளைக் குறைக்கிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதயத்திற்கு நல்லது.

66

நீரிழிவு நோயாளிகள் எவ்வித சர்க்கரையும் எடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் டீயில் இனிப்பு சேர்க்க விரும்பினால் மிகக் குறைந்த அளவில் வெல்லம் போடலாம். இது மெதுவாக இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதனால் அளவாக சேர்க்கலாம். அளவாக எடுத்துக் கொண்டால் வெல்லம் எடை இழப்பை எளிதாக்குகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories