Healthy Drinks : காலையில் 'டீ' வேண்டாம்; இந்த '2' பொருள்கள் கலந்த தண்ணீரை முதல்ல குடிங்க! ஆரோக்கியத்துக்கு முக்கியம்

Published : Oct 08, 2025, 09:17 AM IST

காலையில் சீரகம், ஓமம் கலந்த பானத்தைக் குடிக்கச் சொல்லி மருத்துவர்களே பரிந்துரைக்க என்ன காரணம் என இந்தப் பதிவில் காணலாம்.

PREV
15

காலை எழுந்ததும் குடிக்கும் பானங்கள் வயிற்றுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். அப்போதுதான் நாள் முழுக்க ஆற்றலுடன் வேலை செய்ய முடியும். அதுமட்டுமின்றி குடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் ஒட்டுமொத்த உடலும் நன்றாக இருக்கும். இந்தப் பதிவில் சீரகம், ஓமம் கலந்த நீரின் நன்மைகளை காணலாம்.

25

சீரகமும், ஓமமும் கலந்த தண்ணீர் நாம் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருள்கள். சீரகத்தில் உள்ள தைமால் என்ற நொதி செரிமான அமிலங்களுடைய உற்பத்தியைத் தூண்டும். ஓமம் கார்மினேட்டிவ் விளைவுகளை கொண்டது. வாயு பிரச்சனை, வயிறு உப்புசம் நீங்க உதவுகிறது.

35

இந்த பானத்தை காலையில் குடித்தால் செரிமான அமைப்பை மெதுவாக தூண்டும். எடை குறைக்க நினைப்பவர்களுக்கு சீரகத் தண்ணீர் குறிப்பிடத்தகுந்த நன்மைகளை செய்யும். சீரகம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு, கொழுப்பைக் குறைக்க உதவும். சீரகத்துடன் ஓமமும் கலந்து குடிப்பதால் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.

45

சீரகம், ஓமம் இரண்டையும் இரவில் ஊறவைத்து காலை குடித்தால் ஆக்ஸிஜனேற்றிகள், எண்ணெய்களை தண்ணீரில் வெளியிடும். இதனால் வளர்சிதை மாற்றம் மேம்படும். குடலில் உள்ள கழிவுகள் நீங்கும்.

55

இந்த பானத்தில் பெருஞ்சீரகமும் போட்டு குடிக்கலாம். இது நச்சு நீக்கம், அமிலத்தன்மை குறைய உதவும். கல்லீரலுக்கு நல்லது. பெருஞ்சீரகம், சீரகம் ஆகியவை உணவுக்குப் பின் இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிப்பதை குறைக்க உதவுகிறது. இதனால் இன்சுலின் உணர்திறனை மேம்படும். சர்க்கரை நோயாளிகள் காலையில் ஓமம், பெருஞ்சீரகம், சீரகம் போட்ட தண்ணீர் குடிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories