summer tips சம்மரில் ஒரு நாளைக்கு எத்தனை டீ, காபி குடிக்கலாம்? 6 ஹெல்த் டிப்ஸ்!

Published : May 19, 2026, 06:56 PM IST

வெயில் 40°C ஆனாலும் நம்ம ஊர் டீக்கடையில் கூட்டம் குறையாது. "வெயிலிலும் டீ குடித்தால்தான் சுறுசுறுப்பு" என்பவரா நீங்கள்? அப்படியெனில் இந்த கோடையில் உங்கள் உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்க, நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய விஷயங்கள் இதோ

PREV
16
ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்?

கோடைக்காலத்தில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1 அல்லது 2 கப் (சிறிய அளவில்) மட்டுமே டீ அல்லது காபி குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடித்தால், அதிலுள்ள கஃபைன் (Caffeine) உடல் சூட்டை மேலும் அதிகரித்து, உங்களை சீக்கிரமே சோர்வடையச் செய்துவிடும்.

26
'வாட்டர் பார்ட்னர்' ரூல்!

டீ அல்லது காபி குடித்த அடுத்த 15 நிமிடங்களில் ஒரு கிளாஸ் சாதாரணத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். கஃபைன் உடலில் உள்ள நீரை சிறுநீர் வழியே வெளியேற்றி உடலை வறட்சியாக்கும். இந்த 'வாட்டர் பார்ட்னர்' ரூல் உடலின் நீர்ச்சத்தைச் சமன் செய்யும்.

36
மதிய வெயிலில் டீ குடிக்காதீங்க!

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வெயில் உக்கிரமாக இருக்கும் போது சுடச்சுட டீ, காபி குடிப்பதைத் தவிருங்கள். இது நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியை (Acidity) சட்டென தூண்டிவிடும். காலை 8 மணி அல்லது மாலை 5 மணிக்கு மேல் குடிப்பதே சேஃப்!

46
ஐஸ் காபியில் இருக்கும் ஆபத்து!

சம்மர் வந்துட்டாலே பலரும் 'ஐஸ் டீ' (Ice Tea), 'கோல்ட் காபி' (Cold Coffee) என மாறிவிடுவார்கள். "இது ஜில்லுனு தானே இருக்கு" என நினைத்தால் ஏமாறுவீர்கள். இதில் சேர்க்கப்படும் அதிகப்படியான சர்க்கரை உடல் எடையை கூட்டுவதுடன், தாகத்தை அடக்காமல் உடலை மேலும் வறட்சியாக்கும்.

56
பால் டீ-க்கு லீவ் விடுங்க!

கத்திரி வெயில் முடியும் வரை திக்கான பால் டீ, காபிக்கு பதிலாக லெமன் டீ (Lemon Tea), புதினா டீ (Mint Tea) அல்லது கிரீன் டீ (Green Tea) குடிக்கலாம். இது உடலுக்குப் புத்துணர்ச்சியையும் தரும், கலோரிகளையும் குறைக்கும்.

66
வெறும் வயிறு வேண்டாம்!

சம்மரில் விடியற்காலையிலேயே உடலின் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் வெறும் வயிற்றில் காபி குடித்தால், அது வயிற்றுப் புண்ணை (Ulcer) உருவாக்கலாம். காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது மோர் குடித்துவிட்டு, அதன் பிறகு டீ குடியுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories