ஊறவைத்த பாதாம் vs வால்நட் : எது மூளை ஆரோக்கியத்திற்கு பெஸ்ட்?
மூளையை ஆரோக்கியமாக வைக்க ஊற வைத்த பாதாம் சாப்பிடுவது நல்லதா? அல்லது வால்நட் சாப்பிடுவது நல்லதா? என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கிறது என்றால், இந்த பதிவில் அது குறித்து பார்க்கலாம்.
மூளையை ஆரோக்கியமாக வைக்க ஊற வைத்த பாதாம் சாப்பிடுவது நல்லதா? அல்லது வால்நட் சாப்பிடுவது நல்லதா? என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கிறது என்றால், இந்த பதிவில் அது குறித்து பார்க்கலாம்.
Soaked Almonds vs Walnuts For Brain Health : ஊற வைத்த பாதாம் மற்றும் வால்நட் சாப்பிடுங்கள். இது உங்களது மூளையை கூர்மைப்படுத்தும் என்று பலர் சொல்லுவதை அடிக்கடி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அது முற்றிலும் சரிதான். இவை இரண்டும் மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்குவது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. மூளையை கூர்மைப்படுத்துவது அல்லது நினைவாற்றல் மேம்படுத்துவது என்று வரும்போது இவை இரண்டும் உட்கொள்வது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர் மனதில் அடிக்கடி எழும் ஒரு கேள்வி எதுவென்றால், ஊறவைத்த பாதம் அல்லது வால்நட் இவை இரண்டில் எது மூளைக்கு அதிக நன்மை தரும்? அல்லது நினைவாற்றலை மேம்படுத்த இவை இரண்டில் எது அதிக நன்மை பயக்கும்? இதுகுறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாதாமில் வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ போன்றவே உள்ளன. இவை அறிவாற்றல் குறைபாட்டை தடுக்க உதவுகிறது. முக்கியமாக நீண்ட காலம் உங்களது நினைவாற்றல் மோசமடைவதையும் இது தடுக்கும் மற்றும் நினைவாற்றலை கூர்மையாக்கும். பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ அல்சைமர், டிமென்ஷியா போன்ற பிரச்சனைகள் உருவாகும் அபாயத்தை குறைக்க உதவும். இது தவிர பாதாமில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல் திறனை மேம்படுத்த உதவும். ஆனால் நீங்கள் பாதாமை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதை ஊற வைத்து சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இரண்டு மடங்காக கிடைக்கும்.
இதையும் படிங்க: இந்த உணவுகளால் அல்சைமர் நோய் ஆபத்து அதிகம்; ஆய்வில் தகவல்!
வால்நட்டிலும் நல்ல அளவு ஆரோக்கியமான கொழுப்புகள் வைட்டமின் ஈ உள்ளன. வால்நட்டில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன மற்றும் இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவும். இது மூளையில் ஏற்படும் வீக்கம், வயதான செயல்முறை, அல்சைமர், டிமென்ஷியா போன்ற வயதான தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உதவும். வால்நட் சாப்பிடுவதன் மூலம் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் மேம்படும். இது தவிர பதட்ட மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை குறைக்கும்.
இதையும் படிங்க: மூளையை '1' நிமிடத்தில் சுறுசுறுப்பாக்கும் 'சூப்பர்' யோகா தெரியுமா?
மூளை ஆரோக்கியமானாலும் சரி, உடல் ஆரோக்கியம் ஆனாலும் சரி இவை இரண்டிற்கும் வால்நட் மற்றும் ஊறவைத்த பாதாம் மிகவும் நன்மை பயக்கும். ஒன்றை அதிகமாக சாப்பிட்டால் அதிக நன்மைகளை பெற முடியும் என்பது தவறு. இவை இரண்டையும் எப்போது உங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே 4 பாதாமுடன், 2 வால்நட் சேர்த்து சாப்பிடலாம்.. இதனால் இவை இரண்டின் பலனும் உங்களுக்கு கிடைக்கும்.