Moringa Resin : தீராத நோய்களை தீர்க்கும் முருங்கை பிசின்.. கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Published : Jul 01, 2025, 12:17 PM ISTUpdated : Jul 01, 2025, 12:18 PM IST

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. அதேபோல் இந்த மரத்திலிருந்து வெளிவரும் பசை போன்ற பிசினும் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது. அது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
Moringa Murungai Pisin Benefits

நாம் அனைவருமே பாதாம் பிசின் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இயற்கை அளித்த கொடை, இயற்கையின் தங்க பஸ்பம் என்றெல்லாம் அழைக்கப்படும் முருங்கை பிசின் பற்றிய தெரியுமா? முருங்கை மரங்களில் இருந்து கிடைக்கும் பிசினை நாம் கழிவு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது பல ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது. முருங்கை மரத்தில் உள்ள அதிகப்படியான கால்சியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றை மரம் பிசின் வடிவில் வெளியேற்றுகிறது. இது முதலில் பிசுபிசுப்பாகவும், நீர்த்தன்மையுடனும் விளங்குகிறது. நாளடைவில் இறுகி அடர் பழுப்பு நிறத்தில் ரப்பர் போல மாறி விடுகிறது. இந்த பிசின் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கிறது.

25
பல சத்துக்கள் நிறைந்த முருங்கை பிசின்

முருங்கை மரத்தின் பட்டை அல்லது வெட்டப்பட்ட பகுதியில் இருந்து இந்த பிசின் இயற்கையாகவே வெளிவரும். காய்ந்த நிலையில் இருக்கும் இதை சேகரித்து பயன்படுத்தலாம். இது கழிவு பொருள் என பலரும் இதை அலட்சியப்படுத்துகின்றனர். இதில் இருக்கும் நன்மைகள் குறித்து தெரிந்தால் பலரும் இதை வாங்கிய பயன்படுத்த தொடங்குவர். முருங்கை பிசினில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் பினாலிக் அமிலங்கள், பாலிபினால்கள், ஃபிளவனாயிடுகள் போன்ற சேர்மங்களும் நிறைந்துள்ளன. இதில் கால்சியம் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பு அடர்த்தியை பராமரிக்கவும் உதவுகிறது. கைகால் குடைச்சல், முழங்கால் வலி, மூட்டு வலி பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.

35
முருங்கை பிசின் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை பிசினை வாங்கி நெய்யில் வறுத்து பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர மூட்டு வலி குறையும். இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி பருவ கால தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கிறது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ரத்த சோகை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை தருகிறது. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஹீமோகுளோபினை மேம்படுத்த உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பை ஈடு செய்யவும் உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை நீக்கி, குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.

45
கூந்தல் முதல் ஆண்மை குறைபாடு வரை

இதில் வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இருப்பதால் சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. மேலும் இளம் வயதிலேயே முடி நரைத்தல், முடி உதிர்தல் போன்ற கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வாகிறது. ஆண்மை குறைபாடுகளை நீக்கி விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத் தன்மை பிரச்சனையை சரி செய்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி பாலியல் ஆற்றலையும் அதிகரிக்க உதவுகிறது. சில ஆய்வுகள் முருங்கை பிசினை இயற்கை வயாகரா என குறிப்பிடுகின்றன. முருங்கை பிசின் ஒட்டுமொத்த உடல் பலத்தையும் அதிகரிக்க உதவுகிறது. உடல் சோர்வை போக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது. முருங்கை பிசினை ஊற வைத்து சாப்பிட்டு வர உடலில் உள்ள கெட்ட குறைப்புகள் குறைந்து உடல் அழகான தோற்றம் பெறும்.

55
முருங்கை பிசினை எப்படி பயன்படுத்துவது?

முருங்கை பிசினை நன்றாக கழுவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பாதாம் பிசின் போலவே இது ஜெல்லி பதத்திற்கு மாறிவிடும். ஊற வைத்த முருங்கை பிசினை நேரடியாகவோ அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்தோ சாப்பிட்டு வரலாம். பாலுடன் சேர்த்து காலை அல்லது மாலை வேலைகளில் குடித்து வரலாம். பிசினை நெய்யில் வறுத்து பொடியாக்கி பாலில் சேர்த்து காய்ச்சி குடிக்கலாம். இது பாதுகாப்பானது என்றாலும், இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது கூடாது. சிலருக்கு இது செரிமானக் கோளாறுகளையும் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், நாள்பட்ட நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் முருங்கை பிசினை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories