
பலருக்கும் இரவில் தூங்கிய பிறகும் அடிக்கடி தாகம் எடுக்கும். இதனால் அவர்கள் தண்ணீர் குடிக்க எழுவார்கள். இருப்பினும், நள்ளிரவில் நீங்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பது ஒரு சில கடுமையான நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த நோய் தான் நள்ளிரவில் தாகத்தை ஏற்படுத்திகின்றது.
உண்மையில், அடிக்கடி இரவில் தண்ணீர் குடிக்க தோன்றுவது நீரிழிப்பு, நீரிழிவு நோய் அல்லது சிறுநீரகப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இந்த பழக்கம் நீண்ட காலமாக தொடர்ந்தால் அதை ஒருபோதும் புறக்கணிக்க கூடாது.
இரவில் தாகம் எடுப்பது சர்க்கரை நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும் டைப் 2 நீரிழிவு நோய்தான் இரவில் அதிக தாகத்தை ஏற்படுத்தும். அதாவது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் சமயத்தில் உடல் அதிகப்படியான குளுக்கோஸை சிறுநீர் வழியாக வெளியேற்றும். இதன் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழித்தல், நீரிழிப்பு மற்றும் தாகம் ஏற்படுகிறது.
இது தவிர, இது நீரிழிவு இன்சிபிடஸ் என்னும் நோயின் அறிகுறியாகவும் கருதப்படுகிறது. இது அடிக்கடி தாகம் எடுப்பதற்கும், சிறுநீர் கழிக்க தூண்டுவதற்கும் வழிவகுக்கிறது. இந்த பிரச்சனையானது ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படுகிறது. குறிப்பாக ஆன்டிடியூரிடிக் ஹார்மோனின் குறைபாடு ஆகும்.
நாள்பட்ட சிறுநீரக பிரச்சனையால் உடலில் உள்ள நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் சமநிலை மோசமடையும். இதன் விளைவாக இரவில் அடிக்கடி தாகம் எடுக்கும். ஒருவேளை உங்களுக்கு இரவில் அடிக்கடி தாகம் எடுத்தாலோ அல்லது சிறுநீர் கழித்தால் உடனே சிறுநீரக பரிசோதனை செய்து கொள்வது தான் நல்லது.
இரவில் வாய் வறண்டு போதல் அல்லது அடிக்கடி தாகம் எடுப்பது சுவாச பிரச்சனையின் அறிகுறியாக இருக்கும். இந்த பிரச்சனை குறட்டை மற்றும் இரவில் அடிக்கடி முழிப்பதற்கும் வழிவகுக்கும்.
மாதவிடாய் நிறுத்தம் ;
மாதவிடாய் நிற்கும் சமயத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் இரவில் அதிகமாக வியர்க்கும் மற்றும் தாகம் ஏற்படும்.
- மருந்துகளின் பக்க விளைவு காரணமாக இரவில் தாகம் எடுக்கும்
- இரவில் உப்பு, காரமான உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் உடலில் இருந்து தண்ணீர் வெளியேற்றி, இரவில் தாகத்தை ஏற்படுத்தும்.
- இரவு தூங்கும் போது வாய் வழியாக சுவாசிப்பது வாய்வழி குழியை வறட்சிக்கும். இதனால் தாகம் எடுக்கும்.
- இரவில் மது மற்றும் காஃபின் எடுத்துக்கொள்வது வாய் மற்றும் உடலை நீர் இழுக்கு ஆளாக்கி, நள்ளிரவில் தாகத்தை ஏற்படுத்தும்.