மழைக்காலத்தில் இருமல் மற்றும் சளி ஏற்படுவது இயல்பு. ஆனால், மருத்துவர் பரிந்துரை சீட்டு (Prescription) இன்றி இருமல் மருந்து தரக்கூடாது என்ற நடைமுறை குறித்த மக்களின் கருத்துகள், சுய மருத்துவத்தின் ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள் பற்றிய பார்வை.
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் கட்டுக்கடங்காமல் பரவத் தொடங்கும். காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதும், வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவுவதும் இதற்குக் முக்கியக் காரணமாகும். பெரும்பாலான மக்கள் இதை சாதாரணப் பிரச்சனையாகவே கருதுகிறார்கள்.
26
மருத்துவர் பரிந்துரை சீட்டு (Prescription) ஏன் கட்டாயம்?
சமீபகாலமாக சில இருமல் மருந்துகளில் உள்ள ஆபத்தான வேதிப்பொருள்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் காரணமாக, மருத்துவரின் சீட்டு இல்லாமல் (Over-The-Counter) கடைகளில் இருமல் மருந்துகள் விற்பனை செய்யக் கூடாது என்ற கெடுபிடிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முறையான அளவின்றி மருந்துகளை உட்கொள்வது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கலாம் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
36
மக்கள் என்ன சொல்கிறார்கள்?
"சின்ன இருமலுக்கு மருத்துவமனை சென்று கட்டணம் செலுத்துவதும், நேரத்தைச் செலவழிப்பதும் நடைமுறைக்குச் சாத்தியமில்லை."