வாக்கிங் போறப்ப அதிக வியர்வை வந்தா அதிக எடையை குறைக்குமா?! உண்மை என்ன?

Published : May 03, 2025, 08:25 AM ISTUpdated : May 03, 2025, 07:52 PM IST

வாக்கிங் போகும்போது அதிகப்படியான வியர்வை  அதிக எடையை குறைக்குமா என இந்தப் பதிவில் காணலாம். 

PREV
14
வாக்கிங் போறப்ப அதிக வியர்வை வந்தா அதிக எடையை குறைக்குமா?! உண்மை என்ன?

Is Too Much Sweating During Walking Means Losing Weight : சிலருக்கு நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யும் போது அதிகப்படியான வியர்வை வெளியேறும். இப்படி அதிகமான நீர் இழப்பு ஏற்படும்போது உடலில் அதிகமான எடையும் குறைவதாக சிலர் நினைத்துக் கொள்கிறார்கள்.  நடைபயிற்சியின் போது அதிக வேர்வை வெளியேறுவது அதிக எடை குறைவதன் அறிகுறியா? அதன் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

24
எடையை குறைக்க வாக்கிங்

உண்மை என்ன? 

உண்மையில் நம் உடலில் அதிகமான வியர்வை வெளியேறுவது எடை இழப்புக்கு எந்த விதத்திலும் காரணமல்ல. இது உடலின் நீரிழப்பை தான் வெளிப்படுத்துகிறது. நமது உடலில் உடற்பயிற்சிகளின்போது வெப்பநிலை அதிகமாகும்போது அதை ஒழுங்குபடுத்துவதற்காக வியர்வை வெளியேறுகிறது. வியர்வை மூலம் வெளியேறும் நீரானது தற்காலிகமான வெளியேற்றம்தான். இதனை நீங்கள் தண்ணீர் குடிப்பதன் மூலம் மீண்டும் பெற முடியும். நடைபயிற்சியின்போது வியர்வை அதிகம் வெளியேறி  எடை குறைந்தது போல உணரலாம். ஆனால் அது நீர் இழப்பின் காரணமாகவே தான் அன்றி கொழுப்பு குறைந்ததன் அறிகுறி அல்ல. 

34
எடையை குறைக்க வாக்கிங்

ஏன் வியர்வை வெளியேறுகிறது? 

உடலில் வியர்வை வெளியேற்றம் என்பது வெப்பநிலை ஒழுங்குமுறை சார்ந்தது. உடல் அதிக சூடாகும்போது வியர்வை சுரப்பிகள் வழியாக ஆவியாதல் நிகழ்வு ஏற்பட்டு உடலை குளிர்விக்க நீர் மற்றும் உப்பு வெளியிடப்படுகின்றன.  இப்படி உங்களுடைய எடை இழப்பு ஏற்படுவது தற்காலிகமானது மட்டுமே. மீண்டும் நீங்கள் தண்ணீர் குடிக்கும் போது அல்லது சாப்பிடும்போது இந்த எடை இழப்பு சரி செய்யப்படும். 

44
எடையை குறைக்க வாக்கிங்

எடை இழப்பு: 

உண்மையான எடை இழப்பை  நீங்கள் அடைய வேண்டும் என்றால் அதற்கு கொழுப்பு இழப்பு நிகழ வேண்டும்.  நீரிழப்பு ஏற்படுவது கொழுப்பு இழப்புக்கு ஈடானது அல்ல. கொழுப்பு இழப்புக்கு நீங்கள் சாப்பிடும் அளவைவிட அதிக கலோரிகளை எரிக்க வேண்டும். நீங்கள் 1500 கலோரிகள் உண்கிறீர்கள் என்றால் 2000 கலோரிகள் உடலில் இருந்து எரிக்கப்பட்டால் எடை இழப்பு ஏற்படும். அது வியர்வை வெளியேற்றம் மூலமாக அல்ல, உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மாற்றத்தால்  நிகழ்கிறது. வியர்வை வெளியேற்றம் எந்த வழியிலும் கலோரிகளை எரிக்க உதவாது. உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சியின் போது வெளியேற்றப்படும் வியர்வையின் அளவு உங்களுடைய எடை இழப்புடன் தொடர்புடையது அல்ல. வியர்வை வெளியேறும் போது நீங்கள் எடை இழந்தது போல உணர்ந்தாலும் அது ஒரு தற்காலிகமான மாற்றம். அது எடை இழப்பு கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories