வாக்கிங் கூட இந்த '2' பழக்கங்கள்.. இளமை திரும்பிடும்!! 

Published : Mar 05, 2025, 09:58 AM IST

Walking And Anti Aging : ஆரோக்கியமான வாழ்க்கையை பெற பின்பற்ற வேண்டிய 3 பழக்கங்களை இந்தப் பதிவில் காணலாம். 

PREV
16
வாக்கிங் கூட இந்த '2' பழக்கங்கள்.. இளமை திரும்பிடும்!! 
வாக்கிங் கூட இந்த '2' பழக்கங்கள்.. இளமை திரும்பிடும்!!

நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது எல்லாவற்றையும் விட அவசியமான ஒன்றாகும்.  இதற்கு சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையே சுறுசுறுப்பான உடற்செயல்பாடுதான். சோம்பேறித்தனம் கொண்டிருக்காமல் நாள் முழுக்க இயங்கி கொண்டிருப்பதும், சத்தான உணவு சாப்பிடுவதும் அடிப்படையான விஷயங்களாகும். முழுதானியங்கள், கீரைகள் புரதச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உங்களுடைய ஆற்றலை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட நோய்களுடைய தாக்கத்தை குறைப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. நல்ல தூக்கம், உடற்பயிற்சி, செல்போன் அல்லது டிவி ஆகியவற்றின் திரை நேரத்தை குறைப்பது  உங்களுடைய வழக்கத்தில் இருக்க வேண்டிய நல்ல பழக்கங்களாகும்.  இவை பொதுவாக நீங்கள் பின்பற்றக்கூடிய பழக்கங்கள். இந்த பதிவில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய மூன்று பழக்கங்கள் குறித்து காணலாம். 

26
புரதச்சத்து;

நீங்கள் சாப்பிடும் உணவில் அதிகளவு புரதச்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவுகளில் புரதம் இருந்தால் உடல் வலிமையாகும். அது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

36
நடைபயிற்சி:

நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வதை வழக்கப்படுத்த வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வதால் மூட்டுகள் வலுப்பெறும். உங்களுடைய வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து உடல் எடை கட்டுக்குள் இருக்கும். உடலை சமநிலையில் வைத்திருக்க நடைபயிற்சி உதவுகிறது. மன அழுத்தம் குறைந்து மனநிலை சீராகும். இதனால் இளமையான தோற்றம் பெறலாம். 

இதையும் படிங்க:  தினமும் 1 கிமீ வாக்கிங் போனா 'எவ்வளவு' சீக்கிரம் எடை குறையும்? 

46
நீரேற்றம்:

உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காவிட்டால் பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படக்கூடும்.  உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் போது தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். இது தவிர கல்லீரலில் பிரச்சனை, சிறுநீரகக் கல் போன்ற நோய்களும் வரலாம். நீங்கள் தினமும் இரண்டு லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துவதால் உங்களுடைய சருமம் நீரேற்றமாக இருக்கும்.  மலச்சிக்கல் வராமல் தடுக்க முடியும். 

இதையும் படிங்க:  வாக்கிங் கூட இந்த '6' விஷயங்கள்.. சுலபமா குறையும் எடை!! 

56
நீண்ட ஆயுளுக்கு செய்ய வேண்டியவை:

நீண்ட நாட்கள் வாழ ஆரோக்கியம்தான் அடிப்படையான விஷயம்.  இதற்கு நீங்கள் ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். அளவாக சாப்பிடுவது அவசியம்.  பழங்கள், முழு தானியங்கள், நல்ல கொழுப்புள்ள உணவுகள், உலர் பழங்கள், விதைகள் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். இதனால் உங்களுடைய வயதாகும் செயல்முறை தாமதப்படும். அதிகமான கலோரிகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்து குறைந்த கலோரிகளில் ஆரோக்கியமான உணவுகளை உண்பது நோய்க்கான வாய்ப்புகளை குறைக்கும். அதாவது காய்கறிகள், முட்டை, பழங்கள், கொஞ்சமாக சோறு என சரிவிகிதமாக உண்ண வேண்டும். 
 

66
தவிர்க்க வேண்டிய உணவுகள்:

எவ்வளவு ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதை அளவோடு சாப்பிடும் போது மட்டுமே பலன் கிடைக்கும். நீங்கள் சப்பாத்தி தானே என 10 சாப்பிட்டால் அது தவறு. சப்பாத்தி அல்லது சோறு இரண்டிலும் கார்போஹைட்ரேட் உள்ளது.  ஆகவே உங்கள் உடல் எடைக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு அளவாகவும், குறைவாகவும் சாப்பிடுங்கள். துரித உணவுகள், அதிகமான அளவில் அசைவம் சாப்பிடக் கூடாது.

Read more Photos on
click me!

Recommended Stories