மட்டனை இந்த '1' பிரச்சனையோட சாப்பிட்டால் ரொம்ப ஆபத்து.. சத்துகள் கிடைக்காது 

Published : Mar 04, 2025, 03:16 PM IST

Goat Meat Health Risks : எவ்வளவு சத்துக்கள் காணப்பட்டாலும் யாரெல்லாம் மட்டன் சாப்பிடக் கூடாது என்பதை இந்த பதிவில் காணலாம்.  

PREV
16
மட்டனை இந்த '1' பிரச்சனையோட சாப்பிட்டால் ரொம்ப ஆபத்து.. சத்துகள் கிடைக்காது 
மட்டனை இந்த '1' பிரச்சனையோட சாப்பிட்டால் ரொம்ப ஆபத்து.. சத்துகள் கிடைக்காது

சிக்கன் சாப்பிடுவதை விட மட்டன் சாப்பிடுவது நல்லது என்பது தான் பெரும்பாலானோரின் எண்ணம். உடலுக்கு அதிகமான சத்துக்களை வழங்கக்கூடிய இறைச்சிகளில், ஆட்டு இறைச்சியும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. வாரத்தில் ஒரு நாளாவது மட்டன் வாங்கி சமைப்பது தமிழ்நாட்டில் பல வீடுகளில் வழக்கமாக இருக்கிறது. மட்டனில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் சில பிரச்சனை உள்ளவர்கள் அதை சாப்பிடும் போது உடல் நலக்கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. யாரெல்லாம் மட்டனை சாப்பிடக்கூடாது, எவ்வளவு உண்பது ஆரோக்கியமானது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

26
மட்டன் ஊட்டச்சத்துகள்:

மற்ற இறைச்சிகளை ஒப்பிடும்போது மட்டனில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இரும்புச்சத்து மட்டனில் நிறைந்து காணப்படுகிறது.  சிக்கனை ஒப்பிடும்போது மட்டனில் அதைவிடவும் அதிகமாக இரும்பு சத்து உள்ளது. ஆகவே ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டன் எடுத்துக் கொள்வது நல்ல பலன் தரும். 

36
ஆய்வில் வந்த தகவல்:

அண்மையில் ஹார்வர்டு பல்கலைக்கழகந் செய்த  ஆய்வில் நிறைவுற்ற கொழுப்பு உள்ள உணவுகள் இதய நோய் வரும் வாய்ப்பை அதிகரிப்பதாக தெரிய வந்தது. நிறைவுறா கொழுப்பு இருக்கும் உணவுகள் சாப்பிடும்போது உடம்பில் நல்ல கொழுப்பின் அளவு உயர்ந்து ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.  மட்டனில் நிறைவுறா கொழுப்பு தான் அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால்  இதய ஆரோக்கியம் மேம்படும்.

இதையும் படிங்க:   மட்டன் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? வாரத்திற்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும்?

46
சத்துக்கள் பெருக!

மட்டனில் காணப்படும் பொட்டாசியம் சத்து தசைகளுக்கு நல்லது. உடலுக்கு தேவையான சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அளவினை பராமரிக்க ஆட்டிறைச்சி உண்ணலாம். மட்டன் நாள்தோறும் நமக்கு தேவையான வைட்டமின் பி12 என்ற உயிர்ச்சத்தை வழங்கும்.  கிட்டத்தட்ட 32% வைட்டமின் பி12 மட்டனில் உள்ளது. இவை ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும். 

இதையும் படிங்க:  ஆட்டுக் குடல் கண்டிப்பா வாரம் '1' முறை சாப்பிடுங்க.. கொட்டி கிடக்குது நன்மைகள் பல..! ஈஸி ரெசிபி

56
கண் பார்வை:

மட்டனில் அதிக கால்சியம் இருப்பதால் எலும்புகள் வலுவாகும். இதில் உள்ள கொழுப்பு சத்து உடலுக்கு அதிகமான ஆற்றலை தருகிறது. மட்டனில் உள்ள  வைட்டமின் ஏ கண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அடிக்கடி மட்டன் சாப்பிட்டால் கண்பார்வை மேம்படும். 

66
எவ்வளவு சாப்பிடலாம்? யார் சாப்பிடக் கூடாது?

தினமும் மட்டம் சாப்பிடுபவர்கள் 250 கிராமுக்கு மேல் ஆட்டிறைச்சி உண்ண வேண்டாம். உடலில் ஏற்கனவே 200mg-க்கு மேல் கொலஸ்ட்ரால் அளவு இருப்பவர்வர்கள் மட்டன் உண்பதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.  மற்றவர்கள் தாரளமாக உண்ணலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories