காலைல ரன்னிங் முடிச்சிட்டு வந்ததும் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்கள்!

Published : Mar 04, 2025, 09:48 AM IST

Post Run Nutrition : காலையில் ரன்னிங் முடித்துவிட்டு வந்த பிறகு சாப்பிட வேண்டிய சில ஆரோக்கிய உணவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
18
காலைல ரன்னிங் முடிச்சிட்டு வந்ததும் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்கள்!
காலைல ரன்னிங் முடிச்சிட்டு வந்ததும் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்கள்!

ஓட்டப்பயிற்சி என்பது ஒரு சிறந்த பயிற்சியாககும். தினமும் காலை ஓட்டப்பயிற்சி செய்வது ரொம்ப ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.  ஜிம்மிற்கு செல்லவோ அல்லது தீவிரமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் சிறிது நேரம் ஆவது ரன்னிங் செல்ல வேண்டும் இந்த பயிற்சி கால்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், மனநிலையையும் புதுப்பிக்கும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், மூட்டுகளை வலுப்படுத்தும் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்யும். 

28
ரன்னிங்

பெரும்பாலானோர் காலையில் ரன்னிங் செல்வார்கள். பிறகு வந்தவுடன் தண்ணீர் அல்லது காபி குடிப்பார்கள். ஆனால் ஓட்டப்பயிற்சிக்குப் பிறகு உணவு பழக்கங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துவது ரொம்பவே முக்கியம். எனவே ரன்னிங் முடித்து வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் சத்தான உணவை சாப்பிட வேண்டும். இதனால் உடலானது அதை விரைவாக உறிஞ்சி ஓடும் போது பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்து இழப்பை ஈடு செய்யும். இதனால் தசைகள் சிறந்த முறையில் வளர்ச்சி அடையும் மற்றும் வளர்ச்சியை மாற்றம் சமநிலையில் இருக்கும். எனவே காலையில் ரன்னிங் முடித்து வந்த பிறகு என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

38
உலர் பழங்கள்

ரன்னிங் முடித்து வந்த பிறகு புரதம் கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் ஏ,  வைட்டமின் கே மற்றும் கால்சியம் நிறைந்த உலர் பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகிறது.

48
முட்டை

முட்டையில் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, கலோரிகள் குறைவாகவும், உயர்  புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இது ரன்னிங் முடித்து வந்த பிறகு சாப்பிட வேண்டிய ஒரு முழுமையான உணவாகும். முக்கியமாக எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்த தேர்வு. மேலும் இதில் வைட்டமின் டி, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, துத்தநாகம், இரும்பு செலினியம் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளதால், அவை ஓடி முடித்து வந்த பிறகு உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை வாரி வழங்கும்.

58
வைட்டமின் சி

ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும். எனவே ஓடி முடித்து வந்த பிறகு வைட்டமின் சி எடுத்துக் கொள்ளலாம்.

68
புரதம்

புரதம் உங்களது தசையை சீராக பெரிதும் உதவுகிறது எனவே ரன்னிங் முடித்து வந்த பிறகு சீஸ், கிரீக் யோகர்ட் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

இதையும் படிங்க:   உண்மையில் தொப்பையை குறைக்க 'எது' உதவும் தெரியுமா? வாக்கிங் vs ரன்னிங்?

78
கார்போஹைட்ரேட்

ஓட்டப்பயிற்சி முடித்து வந்ததும் கார்போஹைட்ரேட் நிறைந்த முழு தானியங்கள், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றை சாப்பிடலாம். இது உங்களது உடலில் கிளைகோஜனை நிரப்ப பெரிதும் உதவும்.

இதையும் படிங்க: ஓடும்போது வாய் வழியா சுவாசிக்கலாமா? உங்கள் இதயம் மற்றும் நுரையீரலைப் பாதுகாக்க 3 படிகள்!!

88
தேங்காய் தண்ணீர்:

ரன்னிங் முடித்து வந்த பிறகு உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம். ஏனெனில் ஓடும் போது உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேற்றப்படும். மேலும் அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளும் குறைந்துவிடும். எனவே நீங்கள் சாதாரண தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக ஆற்றல் பானங்கள், எலக்ட்ரோலைட்டுகள் அல்லது தேங்காய் தண்ணீரை குடிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories