வாக்கிங் கூட இந்த '6' விஷயங்கள்.. சுலபமா குறையும் எடை!! 

Published : Mar 04, 2025, 08:34 AM IST

Walking For Weight Loss : நடைபயிற்சியுடன் 6 விஷயங்களில் கவனம் செலுத்தினால் உடல் எடை விரைவில் குறையும். 

PREV
17
வாக்கிங் கூட இந்த '6' விஷயங்கள்.. சுலபமா குறையும் எடை!! 
வாக்கிங் கூட இந்த '6' விஷயங்கள்.. சுலபமா குறையும் எடை!!

உடல் எடையை குறைக்க நடைபயிற்சி உதவும். எடை குறைக்க மட்டுமின்றி இதய ஆரோக்கியம், தசை வலிமை, மனச்சோர்வு நீங்க என பல நன்மைகளுக்கு நடைபயிற்சி உதவுகிறது. இந்த பதிவில் நடைபயிற்சியுடன் செய்யும் சில மாற்றங்கள் 37 கிலோ வரையில் எடையைக் குறைக்க எவ்வாறு உதவுகிறது என்பதை அனுபப் பதிவாக காணலாம். இன்ஸ்டாகிராமில் தனுஸ்ரீயின் என்பவர் தன் எடை குறைப்பு பயணத்தை பதிவிட்டுள்ளார். அவர் சில விஷயங்களை பின்பற்றி 37 கிலோ வரை எடை குறைத்துள்ளார். அவர் வீட்டில் இருந்தே எடை குறைக்க நினைப்பவருக்கு சில அனுபவ குறிப்புகளை பகிர்ந்துள்ளார். அதை இங்கு காணலாம். 

27
நடைபயிற்சி:

நாள்தோறும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது அவசியம். முதல் முறையாக நடைப்பயிற்சி பழகுபவர்கள் இரண்டு பிரிவுகளாக 15 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம். காலை 15 நிமிடங்கள், மாலை 15 நிமிடங்கள் என நடக்கலாம். 

37
புரத உணவு:

கார்போஹைட்ரேட்டை விட அதிக புரதம், நார்ச்சத்து இருக்கும் உணவுகளை உண்ணுங்கள். இதனால் தசைகள் வலுவாகவும், அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வும் ஏற்படும். அடிக்கடி பசிக்காது. 

47
தண்ணீர் குடியுங்கள்!

நிறைய தண்ணீர் அருந்துவது சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உடல் எடை குறைக்கவும் உதவும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உடலை நீரேற்றமாக வைப்பது அவசியமாகிறது. நாள்தோறும் 3 லிட்டர் தண்ணீரை அருந்துங்கள். 

57
எடை பயிற்சி:

எடை பயிற்சி செய்வது தசைகளை வலிமையாக்கி எடை குறைக்க உதவும். உடற்பயிற்சிக்கு என டம்பல் போன்ற உபகரணங்கள் இல்லாதவர்கள் நிரப்பப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், புத்தகங்கள், அரிசி அல்லது கோதுமை சாக்கு ஆகிய பொருள்களில் பயிற்சி செய்யலாம். 

இதையும் படிங்க:  தினமும் 1 கிமீ வாக்கிங் போனா 'எவ்வளவு' சீக்கிரம் எடை குறையும்? 

67
இரவு உணவு நேரம்:

இரவு உணவை தாமதமாக எடுக்கக் கூடாது. இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு முடிப்பது நல்லது. அரன் பிறகு எதையும் சாப்பிடாமல் மறுநாள் காலை வரை உண்ணாவிரதம் இருப்பது நல்லது. 

இதையும் படிங்க:  வித்தியாசமான வாக்கிங்!! 50 வயசுக்கு மேல 'எவ்வளவு' நேரம் 'பின்னோக்கி' நடக்கனும் தெரியுமா? 

77
உடற்பயிற்சி:

வீட்டில் செய்யக் கூடிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஜிம் செல்லாமல் வீட்டில் செய்யும் எளிய உடற்பயிற்சிகளில் எடையை குறைக்கலாம். ஆனால் அதற்கு நீங்கள் மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories